Books / Donate Us

For Book Donation:

செல்லும் பாதையில் புத்தகம்
ஊக்கமது கைவிடேல் புத்தகம்

Book Donation

நன்கொடை அளித்தவர்கள் அனைவருக்கும் எங்கள் இதயம் கணிந்த நன்றிகளை தெரிவித்துகொள்கின்றோம்

NameDonation
Mr.Praveen500
Mr.Parameshwaran150
Ms.Thilagavathi500
Mr.Tynus Stanley1000
Mr.Gopala Krishnan100
Mr.Sasi Kumar2000
Mr.Gunalan Mookaiyaa500
Mr.Shanmugavel500
Mr.Gopi Krishnan200
Ms.Priya200
Mrs.Gunasundari1000
Mr.Shanmugam , Malaysia(Charity Purpose)3594
Mr.Surya220
Ms.Pavithra110
Ms.Vaishnavi1
Ms.Mridula10
Mr.Balakrishnan sasishkanth, Australia.4850
Mrs.Deepa, shenoy nagar,Chennai500
Mr.Gunaalan,Madurai500
Mr.Balan Alberta, Cuddalore300
Mr.Dharma,Saidapet,Chennai100
Mrs. Harika, Chennai500
Mr. Justin Diraviam, Kuwait5000

Charity Donation

Our Life is Beautiful when we live for others. Uthirathin UthavigaL Charitable Trust, is able to sustain for over more than 6 years only because of the moral support of all the good hearted people, who have been helping us by donating, to serve the society. In spite of having volunteers and the idea to serve the people, we did not have enough resource to benefit the society.Joining our hands will make big difference in our society.

.

Even a single penny will help us go forward in our mission.

Other Motivational Posts:

முடிவெடுக்க தயங்காதே!

குறளின் குரல்! – திருக்குறள்

பதிவு:175 அதிகாரம்: ஆள்வினை உடைமை குறள் எண்:611

முடிவெடுக்க தயங்காதே!

அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

விளக்கம்:
அறிய காரியம் என்று மலைக்கவேண்டாம், முயற்சி எல்லா பெருமையையும் தரும்.

Sunset & field of grain
முடிவெடுக்க தயங்காதே!

வள்ளுவர் எழுதிய திருக்குறளிலிருந்து தினம் ஒரு திருக்குறளை நாம் பார்த்துக் கொண்டு வருகிறோம். இது நம்முடைய 175வது பதிவு. ஆள்வினை உடைமை என்ற தலைப்பிற்கு கீழ் வரக் கூடிய அழகான, அற்புதமான ஒரு திருக்குறள். மாறுபட்ட கண்ணோட்டத்தில் இந்த குறளின் அடிப்படையில் ஒரு சில விஷயங்களை நாம் இன்று தெரிந்துக் கொள்ளலாம். நம்முடைய வாழ்க்கையில் நாம் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு போகும் பொழுது முடிவெடுக்க வேண்டிய நிர்பந்தமான சூழல் நமக்கு ஏற்படும்.

நாம் எடுக்க போகும் முடிவை சார்ந்து தான் நம்முடைய வாழ்க்கை நகர்வு அமையும். வளையாத நதிகளும் இல்லை வழியில்லாத வாழ்க்கையும் இல்லை. சூழலை கண்டு நாம் அஞ்சக் கூடாது. நம்மை திறனடிக்கும் சூழல் என்று எந்த ஒரு சூழ்நிலையுமே கிடையாது. எந்த முடிவை நாம் எடுத்தாலும் எந்த வழியை நாம் தேர்ந்தெடுத்தாலும் அதற்கு என்று உட்பட்ட நன்மையும், தீமையும் கலந்து தான் அது வரும். முடிவெடுப்பதற்கு நாம் தயங்குவதை விட தவறான முடிவை எடுத்து பயணிக்கிறது ஒரு விதத்தில் நம் வாழ்க்கை ஓட்டத்தை மாற்றும்.

Photo of Pathway Surrounded By Fir Trees
முடிவெடுக்க தயங்காதே!

தவறான முடிவு கூட எதாவது ஒரு இடத்திற்கு நம்மை நகர்த்தும். ஆனால், எந்த முடிவும் எடுக்காமல், எதுவும் செய்யாமல் இருந்தோம் என்றால் நாம் எங்கையும் நகர மாட்டோம். நம்முடைய வாழ்க்கையில் நாம் எது ஒன்றை அடைய வேண்டும் என்று ஆசை பட்டாலும் நம்மால் அதை அடைய முடியும். ஆனால், ஒவ்வொரு நேரம் காலத்திலும், ஒவ்வொரு நிலையிலும் முடிவெடுப்பதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். வாழ்க்கையில் மிகப் பெரிய தருனத்திற்கு வந்த ஒவ்வொருத்தருமே எதோ ஒரு தருனத்தில் துணிந்து முடிவெடுத்தவர்களாக தான் இருப்பார்கள்.

நாம் எடுக்கக் கூடிய ஒரு சில முடிவுகள் நம் வாழ்க்கையின் ஆரம்பமாக இருக்கும். ஒரு சில முடிவுகள் நம் வாழ்வின் ஆதாரமாக இருக்கும். ஒரு சில முடிவுகள் நம் வாழ்க்கையாகவே இருக்கும். நாம் செய்ய போகிற காரியத்தை குறித்து என்ன விதமான மனநிலை நமக்கு இருக்கிறதோ அதை சார்ந்து தான் நம்முடைய கண்ணோட்டம் இருக்கும். நம்முடைய வாழ்க்கையில் வாய்ப்புகளும், வலிகளும் ஒன்றாக இணைந்து தான் வரும். வாய்ப்புகளுக்கிடையே வலிகள் மட்டும் இல்லை வழிகளும் ஒளிந்துக் கொண்டு தான் இருக்கும்.

சரியான அனுகுமுறையில் நாம் அனுகிறோம் என்றால் அந்த விதமான வழிகள் நம்முடைய பார்வைக்கு தெரியும். செய்தே ஆக வேண்டும் என்று முடிவேடுத்த பிறகு சிறிதா, பெருசா என்று யோசிக்கக் கூடாது. போயாக வேண்டும் என்ற ஒரு நிலை வந்த பிறகு எவ்வளவு தூரம், எவ்வளவு உயரம் என்று ஆராயக் கூடாது. அளப்பது அல்ல கடப்பதே நம்முடைய கடமையாக இருக்க வேண்டும். செய்யும் வேலையாக இருக்கட்டும், பயனிக்கின்ற பயணமாக இருக்கட்டும், ஆசை படும் வாழ்க்கையாக இருக்கட்டும் முயற்சி மட்டும் தான் நமக்கு இருக்கின்ற ஒரே வழி.

Man Walking on Road With Orange Bag Surrounded by Trees
முடிவெடுக்க தயங்காதே!

நம்முடைய வாழ்க்கையில் முயற்சியும், முறையான பயிற்சியும் இருந்தது என்றால் நடக்காதது, கிடைக்காதது என்று ஒரு விஷயமே நம்முடைய வாழ்க்கையில் இருக்காது. எந்த நிலையிலும் நம்முடைய முயற்சியை நாம் கைவிடக் கூடாது. அதற்கு தான் வள்ளுவர் இந்த குறள் வழியாக நமக்கு ஆழமான சத்தியத்தை உணர்த்துகிறார். “அறிய… தரும்” என்று. அதாவது “அருமை… தரும்.” இந்தக் குறளை நாம் தியானிக்கும் பொழுது நிச்சயமாக எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் அதை செய்து முடிப்பதற்கான தன்னம்பிக்கை நம்முடைய மனதில் ஊற்றெடுக்கும்.

நன்றிகள்!

நடந்ததை நினைத்து வாழ்வை வீணடிக்காதே! Click here

தனிமையில் உன்னை உருவாக்கு! Click here