About us:

சிற்பிகள் பயிற்சி மையமானது “உதிரத்தின் உதவிகள்” அறக்கட்டளையின்(அரசு பதிவு எண்: 124/2016 ) ஒரு அங்கம். இந்த அமைப்பின் வழியாக ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் பலவிதமான மாற்றங்களை நாங்கள் ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றோம். கல்வியால் மட்டுமே ஒரு தனி மனிதனையும், சமூகத்தையும், நாட்டையும் மாற்றவும், முன்னேற்ற முடியும். நாம் வாழும் வாழ்வில் நலமும், வளமும் இருக்க வேண்டுமென்றால் அதற்கான அடித்தளம் கல்வி.

கல்வி என்பது ஒவ்வொரு தனி மனிதனுடைய வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. நம் பயிற்சி மையத்தின் வழியாக ஆதரவற்ற தாய், தந்தை இறந்த முதல் தலைமுறை மாணவ மாணவிகளின் கல்வி மற்றும் முன்னேற்றத்திற்கான வழிகளை போதித்து, அவர்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான நல்லதொரு துவக்கத்தை நாங்கள் துவங்கியுள்ளோம்.

பள்ளிப் படிப்பிலிருந்து போட்டித்தேர்வு வரை மாணவ மாணவிகளை வழிநடத்தவும், அவர்களுக்கான பயிற்சி அளிக்கவும் ஆரம்பிக்கப்பட்ட அமைப்புதான் சிற்பிகள் பயிற்சி மையம். அது மட்டும் இல்லாமல் படிக்க வேண்டும், வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் மாணவ-மாணவிகள் யாராக இருந்தாலும் அவர்களின் கல்வி மற்றும் முன்னேற்றத்திற்கான வழிகளையும், வாய்ப்புகளையும் நாங்கள் உருவாக்கி தந்து கொண்டிருக்கின்றோம்.

2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு வழியாக இதுவரை எண்ணற்ற மாணவ மாணவிகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான விதைகளை நாம் வைத்துள்ளோம். இணையவழி வகுப்பு வழியாகவும் நேரடி வகுப்பு வழியாகவும் இது வரை எண்ணற்ற மாணவ-மாணவிகள் எங்களுடன் இணைந்து தங்கள் வாழ்க்கைக்கு தேவையான அடித்தளத்தை அவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர் என்று அய்யன் திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றம் நம் மனதில் புரிந்துள்ள எண்ணங்களின் தொகுப்பை சார்ந்தே அமையும்.

அதற்காகவே ஊக்கம் தரக்கூடிய, உற்சாகம் தரக்கூடிய வார்த்தைகளையும், சிந்தனைகளையும், எண்ணங்களையும் ஒவ்வொருநாளும் இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்து கொண்டிருக்கின்றோம். அறம் சார்ந்த சமூகத்தையும், அர்த்தங்கள் நிறைந்த சமூகத்தையும் உருவாக்க வேண்டும் என்பதே நம்முடைய எண்ணம். இதன் வழியாக நம்முடைய எண்ணங்களும் சிந்தனைகளும் மாறுபட்டு நம்முடைய செயலில் நம்மால் உறுதியாக செயல்பட முடியும். வாழ்வில் சில விஷயங்கள் எவ்வளவு விரைவாக செய்கிறோம் என்பது முக்கியமல்ல எவ்வளவு விரைவாக செய்கின்றோம் என்பதே முக்கியம். சிற்பிகள் பயிற்சி மையத்தின் ஓட்டம் மிக வேகமானது அல்ல மிக நீண்ட தூரமானது.

ஒவ்வொருவரின் வாழ்விலும் மாற்றமும், ஏற்றமும் காணப்பட வேண்டும் என்பதே சிற்பிகள் பயிற்சி மையத்தின் முக்கிய நோக்கம். நம்முடைய பாதையில் இருக்கும் வாய்ப்புகளை நாம் சரியாக பயன்படுத்தி நம்மை சார்ந்தவர்களுக்கு அதை அடையாளப்படுத்த வேண்டும் என்பதே நம்முடைய ஒவ்வொருவரின் முக்கியமான நோக்கமாக இருக்க வேண்டும். படிப்பது என்பது சுகமானது, மகிழ்ச்சியானது என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொண்டால் நாம் எடுக்கும் இலட்சியப் பாதையில் நம்மால் எளிமையாக வெல்ல முடியும் என்பதை தான் நாங்கள் ஒவ்வொரு மாணவர்களுடன் மனதிலும் விதைக்க விரும்புகின்றோம்.

நாம் படிக்கும் படிப்பு நமக்கும், நம் சமூகத்திற்கும் பயன்படவில்லை என்றால் நாம் படிக்கும் படிப்பால் எந்தவிதமான அர்த்தங்களும் இல்லாமல் போகும். ஆரோக்கியமான மாணவ மாணவிகளையும் மிகச்சிறந்த அதிகாரிகளையும் உருவாக்க வேண்டும் என்பதே சிற்பிகள் பயிற்சி மையத்தின் தலையாய நோக்கம்.

வெற்றி என்பது திடீர் நிகழ்வு அல்ல. அடக்கமுடியாத ஆசையாலும், தீவிரமான உழைப்பாலும், சரியான செயல்பட்டாலும் அதில் கிடைக்கும் என்பது கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில் அவர்களின் பொன்மொழிகள். சிறந்த இலட்சியத்தில் பயணிக்கும் ஒவ்வொரு மாணவ மாணவிகளுக்கும் சிற்பிகள் பயிற்சி மையத்தின் வாழ்த்துக்களும், நன்றிகளும். நம்முடைய இலட்சியத்தில் நாம் தெளிவாகவும், உறுதியாகவும் செயல்பட்டால் நாம் நினைக்கும் வெற்றியை நம்மால் எட்ட முடியும்.

Uthirathin UthavigaL Charitable Trust (Reg No:24/2016):The Aid Foundation is a voluntary organization created by friends to realize the responsibility of the community and to serve the community.
Make them to say ” I live by you rather than I live for you”
Is a sentence that has had the greatest impact on our minds.We are living our lives according to this word
Although countless creatures live on this earth, each creature has its own responsibilities. No matter what kind of famine the land, water, air, sky, fire take, they all have a specific responsibility, duty and character. In this sense this overall mixed man also has innumerable social responsibilities. Every obligation we make on the earth we live on is somehow making a few changes on this earth.

The life we ​​live is not only beautiful. Full of many different meanings. We must love our fellow human beings and creatures. In a way we depend on nature. Similarly, nature is dependent on us. Humans have a responsibility to protect and guide all living things on this earth. Our community will become more beautiful when we love the community in which we live and do what we can for those who depend on us every day.

Through Uthirathin UthavigaL Charitable Trust, we have been doing countless social work. We also focus on the essential needs of the poor and simple people ,education and the environment. Anyone who has the thought of being responsible to the community can join with us. There are more than five lakh orphanages in Tamil Nadu alone.Its is our own Responsibility to take care of them.

Uthirathin Uthavigal charitable trust is one of the best self help group in Chennai. Here you Join with us to make our society more beautiful.

You can Donate and support us

Chiselers Academy, One of the Best institute for E-Learning.Its mainly for UPSC and TNPSC aspirants.We all have certain dream in our life.some have a dream to Become a Doctor,Engineer,Lawyer,Teacher and etc.If you have a Dream to become and administrator like IAS.,IPS.,IRS.,we are here to show you the way to Know about it and achieve it.Idea and Guidelines are two important thing in our life.If you have an Idea about your Life,we are here to serve you! Lets live for what we what…!Life will become most beautiful when we live for what we love!

Why Chiselers academy? Probably, we know the meaning of chiselers.the one who use chisel to make a statue.he didn’t add anything to the statue.He just remove the unwanted parts of the stone, so that the stone will become a very beautiful statue! We use this simple technique to create the healthy generation.We know the value of the education and the worth of child.we try to connect both.Every child is a unique individual with different needs.l
We understand their world
Our Moto: Enter Encourage Empower

Note:

We have 12A certificate

from the Income Tax Department,INDIA and Applied for 80G Certificate.

Social Responsibility

Uthirathin Uthavigal Charitable Trust உதிரத்தின் உதவிகள் அறக்கட்டளை(பதிவு எண்:24/2016) சமூகத்தின் பொறுப்பை உணர்ந்து, சமூகத்திற்கு சேவையாற்றுவதற்காக நண்பர்களால் உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வ அமைப்பு.
“உனக்காக வாழ்கிறேன் என்று சொல்வதைவிட

உன்னால்தான் வாழ்கின்றேன் என்று சொல்ல வை”
என்பது எங்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு வாக்கியம்.இந்த வார்த்தைக்கு இணங்க எங்கள் வாழ்வை நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இந்த பூமியில் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்ந்தாலும், ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு விதமான பொறுப்புகள் இருக்கின்றன. நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு இப்படி எந்த விதமான பஞ்சபுதங்கள் எடுத்துக் கொண்டாலும் அவை எல்லாவற்றுக்கும் ஒரு குறிப்பிட்ட பொறுப்புக்களும், கடமைகளும், தன்மைகளும் இருக்கின்றன. இந்த வகையில் இந்த ஒட்டுமொத்த கலவையான மனிதனுக்கும் எண்ணற்ற சமூகப் பொறுப்புகள் இருக்கின்றன.

நாம் வாழும் பூமியில் நாம் மாற்றும் ஒவ்வொரு கடமைகளும் ஏதோ ஒரு வகையில் ஒரு சில மாற்றங்களை இந்த பூமியில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.நாம் வாழும் வாழ்க்கை அழகானது மட்டுமல்ல. பல விதமான அர்த்தங்கள் நிறைந்தது. நம்முடைய சக மனிதர்களையும், உயிரினங்களையும் நாம் நேசிக்க வேண்டும். ஒரு விதத்தில் நாம் இயற்கையை நம்பியிருக்கின்றோம். அதேபோன்று இயற்கையும் நம்மை நம்பி இருக்கின்றது. இந்த பூமியில் இருக்கும் எல்லா உயிரினங்களையும் பாதுகாக்கும் வழிநடத்தும் பொறுப்பு மனிதர்களுக்கு இருக்கின்றது. நாம் வாழும் சமூகத்தை நாம் நேசித்து நம்மால் என்ன முடியுமோ அதை ஒவ்வொரு நாளும் நம்மை சார்ந்தவர்களுக்கு நாம் செய்யும் பொழுது நம்முடைய சமூகம் இன்னும் அழகாக மாறும்

Uthirathin Uthavigal Charitable Trust

எங்களோடு இணைய வேண்டுமா?

உதிரத்தின் உதவிகள் அறக்கட்டளை வழியாக, எண்ணற்ற சமூக பணிகளை செய்து வருகின்றோம். கல்வியிலும், சுற்றுப்புறத்திலும் ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய தேவைகளையும் நாங்கள் கவனம் செலுத்துகின்றோம். சமூகத்திற்கு கடமையாற்ற வேண்டும் என்ற சிந்தனை இருக்கும் யாராக இருந்தாலும் எங்களுடன் இணையலாம். உலகம் முழுவதும் தேவைக்கதிகமான விஷயங்கள் ஒரு படத்திலும் தமிழகத்தில் மட்டும் ஆதரவற்றோர் இல்லங்கள் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட இல்லங்கள் இருக்கின்றன.

நாம் வாழக்கூடிய வாழ்க்கையில் நிறைவும் நிம்மதியும் இருக்கணும் என்றால், நாம் சக மனிதர்களை மதித்தும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தும், எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும்.

நம் வாழ்க்கை பல ஆச்சரியங்களும், அற்புதங்களும் நிறைந்த ஒன்றாக இருக்கின்றது.இப்படிப்பட்ட இந்த வாழ்க்கையில், நிச்சயம் இல்லாத இந்த வாழ்க்கையில், நிரந்தரமில்லாத இந்த வாழ்க்கையில், பலவிதமான பிரச்சனைகளை நாம் முரண்பட்டு நிற்போம்.

பல விதமான வேறுபாடுகள், வித்தியாசங்கள், வேற்றுமைகள், முரண்பாடுகள் நமக்குள்ள இருந்தாலும், அதையும் தாண்டி நாம் எல்லோருக்கும் நாம் இயற்கையின் ஓர் அங்கம் என்ற உணர்வு இருக்க வேண்டும்.

சக மனிதர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும், சக உயிரினங்களை நேசித்து, பாதுகாக்கவும் நமக்கு தெரிய வேண்டும்.மீண்டும் ஒரு பிறப்பு இந்த பூமியில் நமக்கு இருக்கும் என்பது சர்வ நிச்சயம் கிடையாது.நாம் இருக்கும்வரை நம்மால் முடிந்த நிறைய நன்மையான காரியங்களை நாம் செயல்படுத்தலாம்! 

தெரிந்தவர்களுக்கும் தேவையானவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை நாம் செய்யாலாம். பறவைகளுக்கும் வீட்டுப் பகுதியில் வாழக்கூடிய மற்ற உயிரினங்களுக்கும் தேவையான உணவுகளை நாம் அளிக்கலாம். மரங்களும் ,மருத்துவ குணம் நிறைந்த செடிகள் வளர்த்து, இயற்கையை பராமரிக்கலாம். உதவி என்று கேட்போருக்கு, நம்மால் முடிந்த உதவிகளை நாம் செய்யலாம். இது போன்ற எண்ணற்ற காரியங்கள் நம் மனதையும், வாழ்வையும் மேன்மை அடையச் செய்யும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் இல்லை. நம்முடைய வாழ்வு நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் பயன்படும் விதத்தில் அமைய வேண்டும் என்பதே அறம்! அந்த அறத்தின் பாதையில் பயணிக்க விரும்புவோர் எங்களுடன் இணையலாம்.

நம் அமைப்பு வழியாக நாம் இதுவரை எண்ணற்ற அறம்சார்ந்த காரியங்களை செய்திருக்கின்றோம்.இனியும் நாம் நிறைய அறம்சார்ந்த காரியங்களை செயல்படுத்த இருக்கின்றோம்.

நம் முக்கிய நோக்கமானது…

1. ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களுடைய வாழ்வியல் சம்பந்தமான காரியங்களுக்கு உதவி புரிவது.

2.இயற்கையைப் பேணி பாதுகாப்பது.

3.கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு தேவையான உதவிகளை செய்வது.

4.வாழ்வில் முன்னேறுவதற்கான வழிகளையும்,அதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கி தருவது.

5.முதல் தலைமுறை மாணவ-மாணவிகளின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான ஊக்கத்தையும் உந்துதலையும் வழங்குவது.

6.பொருளாதாரத்தில் பின்தங்கிய உடலுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவது.

7.சுற்றுச்சூழலை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடுவது.

8.மருத்துவம் மற்றும் வாழ்வியல் சார்ந்த வழிமுறைகளையும், ஆலோசனைகளையும், உதவிகளையும் செய்வது.

9.ஏழை எளிய மாணவ-மாணவிகளின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான அடித்தளங்களை அமைப்பது

10.தேவையானவர்களுக்கு தேவையான நேரத்தில் ரத்தத்தை தானம் செய்வது.

11.குடி,போதை,புகையிலை போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகி இருப்பவர்களை மீட்டெடுத்து, அவர்களுக்கு தேவையான வாழ்வியலை உருவாக்கித் தருவது.

12.கிராமப்புற மாணவ மாணவிகளின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு தேவையான அடித்தளத்தை உருவாக்குவது

13.தொழில்நுட்பக் கல்வியில் ஏழை எளிய மாணவ-மாணவிகளை ஊக்குவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது

14.மேல் படிப்புக்கு தேவையான வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் வழங்குவது

15.நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கீழ்ப்படிந்து, நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க முயற்சிப்பது

16.அனைத்து மத நல்லிணக்கம் மத நல்லிணக்கத்தையும் பேணுவது.

17.நம்பிக்கை இழந்தவர்களுக்கு வாழ்வைத் தொலைத்து அவர்களுக்கும் அதை மீட்டுத் தருவது

18.தகுந்த கல்விக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவது.

இன்னும் எண்ணற்ற அறம்சார்ந்த காரியங்கள்

You can Join with us

Call us: +91 90420 50820 +91 90430 50820

Mail us: [email protected]

Uthirathin UthavigaL Charitable trust video:Click Here

See about Our activities

Our works:Click here