மதியாதார் தலைவாசல் மிதியாதே!

மதியாதார் தலைவாசல் மிதியாதே!

குறளின் குரல்! – திருக்குறள்

மதியாதார் தலைவாசல் மிதியாதே!

பதிவு எண்: 358       அதிகரம்: புகழ்      குறள் எண்: 236

மதியாதார் தலைவாசல் மிதியாதே!

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று

விளக்கம்: ஒரு துறையில் முற்பட்டு தோன்றுவதானால், புகழோடு தோன்ற வேண்டும். அப்புகழுக்கு உரிய தகுதியில்லாதவர் அங்கு தோன்றுவதை விட தோன்றாமல் ஒதுங்கி இருப்பது நல்லது.

‘மதியாதார் தலைவாசல் மிதியாதே’ என்பது நம் ஔவையின் வாக்கு. இன்றைய காலக்கட்டத்தில், இந்த வார்த்தையை நாம் நடைமுறைபடுத்த வேண்டுமென்றால், நம்மை சுற்றியுள்ள நிறைய உறவுகளை நாம் இழக்க நேரிடும். ஏனென்றால், சில உறவுகள் நம்முடைய தகுதியை பார்த்து, நம்முடைய நிலையை பார்த்து, நம் பணத்தை பார்த்து, நம்மிடம் இருக்கும் வசதி வாய்ப்புகளை பார்த்து தான் நம்மிடம் பழகுவார்கள்.

இவை எல்லாவற்றையும் பார்த்து தான் ஒரு உறவு நம்மை மதிக்கும், நேசிக்கும் என்றால், அந்த உறவுகளோடு இருப்பதற்கு பதிலாக, நாம் தனியாக இருந்துவிடுவது நமக்கு நலமாய் அமையும். ஔவையாரினுடைய வாக்கின் மாறுபட்ட கண்ணோட்டம் தான், நம் வள்ளுவரின் இந்த வாக்கியம், ‘தோன்றின் புகழொடு தோன்றுக’ என்பது.

அதாவது, நாம் ஓரிடத்திற்கு போகின்றோம் என்றால், யாராலும் நிராகரிக்கவே முடியாத தகுதியோடும், புகழோடும் தான் போக வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், ஓர் இடத்திற்கு போவது என்பதும், பொது நிகழ்ச்சியில் பங்கு கொள்வது என்பதும், தேவையற்ற மனக்கசப்பை நமக்கு ஏற்படுத்தும். நம்மிடம் இருக்ககூடிய பொருட்களை வைத்து, நம்மை சார்ந்த உறவுகளை நம்மோடு இழுத்து பிடிக்க நாம் நினைத்தால், நம் எண்ணம் ஒரு நாள் தவிடுபொடியாகும்.

மதியாதார் தலைவாசல் மிதியாதே!

சில இடங்களில், சிலர் நம்மை அலட்சியப்படுத்துவார்கள், நம்மை உதாசினப்படுத்துவார்கள் என்று நமக்கு தெரிந்தும், அந்த சூழலில் இருக்க நாம் ஆசைப்படுவோம். அந்த ஆசை தான் நம்முடைய வாழ்க்கையில் சில சங்கட்டங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும்.

நம்முடைய உணர்வுகளை பாதிக்கக்கூடிய, நம்முடைய மனதை நோகடிக்கக்கூடிய, நம்மை அலட்சியமாக பார்க்கும் உறவுகள் எந்த உறவாக இருந்தாலும், அந்த உறவுகளை விட்டு நாம் தள்ளி இருக்க பழக வேண்டும். சரியான தகுதியோடும், புகழோடும் நாம் இருக்கும்பொழுது மட்டும் தான், ஒரு சில இடங்களில் நம்முடைய முகத்தை நாம் காண்பிக்க வேண்டும்.

பிரச்சனைகளை மட்டுமல்ல, பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கக்கூடிய காரணிகளை விட்டும் நாம் ஒதுங்கி இருக்க பழக வேண்டும். நாமாகவே வழிய சென்று சில அவமானங்களை சம்பாதிக்க கூடாது. மதிப்பில்லாத இடத்தில் முகம் காட்டுவது என்பது, நமக்கு கசப்பான அனுபவங்களை மட்டும் தான் பெற்று தரும். சரியான தகுதியோடும் புகழோடும் நாம் இருக்கும்பொழுது மட்டும் தான் ஒரு சில இடங்களில் நாம் முகம் காட்ட வேண்டும்.

இல்லையென்றால், அந்த தகுதியும் புகழும் நமக்கு வரும்வரை நாம் காத்திருக்க வேண்டும். அதற்கென்றே நம்மை நாமே தயார்படுத்த வேண்டும். ஏதாவது ஒரு இடத்தில், ஏதாவது ஒரு சூழலில், நீங்கள் அவமானப்பட்டிருந்தீர்கள் என்றால், இந்த சிந்தனைகளை சிந்தித்துப் பாருங்கள். உங்களுடைய அவமானத்திற்கான காரணம் என்னவென்று இந்த சிந்தனையிலிருந்து உங்களுக்கு விளங்க ஆரம்பிக்கும்.

கால நேரத்தை வீணடிக்காமல், நம்முடைய தகுதிகளையும், புகழ்ச்சியையும் அதிகப்படுத்துவதற்கான முயற்சியில் நாம் ஈடுபட்டோம் என்றால், எந்த ஒரு சூழலிலும் நாம் அவமானப்படுத்தப்பட மாட்டோம். ஏனென்றால், நம் வள்ளுவர் சொல்லியிருக்கின்றார்,

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று

என்று.

நன்றிகள்!

மதியாதார் தலைவாசல் மிதியாதே! : click here

பழிவாங்காதே! கர்மா பார்த்துக்கொள்ளும் : click here

beelive123

Chiselers Academy, One of the Best institute for E-Learning.Its mainly for UPSC and TNPSC aspirants.We all have certain dream in our life.some have a dream to Become a Doctor,Engineer,Lawyer,Teacher and etc.If you have a Dream to become and administrator like IAS.,IPS.,IRS.,we are here to show you the way to Know about it and achieve it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *