கள்ளக் காதல்

கள்ளக் காதல்

குறளின் குரல்! – திருக்குறள்

கள்ளக் காதல்

பதிவு எண்: 359  அதிகரம்: பிறனில் விழையாமை  குறள் எண்: 141

கள்ளக் காதல்

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து

அறம்பொருள் கண்டார்கண் இல்

விளக்கம்: வேறொருவனுக்கு சொந்தமானவளை காதலித்து வாழும் மடமை, உலகத்தில் அறநூலையும், பொருள் நூலையும் கற்றுத் தெளிந்தவர்களிடத்தில் இல்லை.

‘பிறனில் விழையாமை’ என்ற தலைப்பின் கீழ் வரக்கூடிய அழகான, அற்புதமான ஒரு குறள் இது. ‘பிறனில் விழையாமை’ என்றால், ‘பிறன் மனைவியை விரும்பாமை’ என்று அர்த்தம். ‘காதல், திருமணம், குடும்ப வாழ்க்கை’ – இவை அனைத்துமே நாம் நினைப்பது போல் சாதாரண காரியங்கள் கிடையாது.

இவை அனைத்துமே, ஒவ்வொருவரினுடைய வாழ்க்கையின் அடித்தளங்கள். நிகழ்காலத்தில், நம்மை சுற்றி நிறைய சமூக பிரச்சனைகள் இருக்கின்றது. அதில் மிகவும் முக்கியமானது, ‘கள்ளத்தனமான காதல்’. ‘வெறுமனே, வெத்து காரணங்களுக்காக பழகுவது, பேசுவது, காதலிப்பது, தனிப்பட்ட ஆதாயம், தனிப்பட்ட தேவைக்காக ஒருவருடைய அன்பை பயன்படுத்துவது, சந்தர்ப்பம் மற்றும் சூழலுக்கு ஏற்ப நடிப்பது’ – இது போன்ற எண்ணம் இருக்கக்கூடிய எவருமே, நீண்டக் காலம் இந்த பூமியில் நிறைவாகவும், நிம்மதியாகவும் வாழ முடியாது.

நம்முடைய காதல் ‘புனிதமானதா?’ அல்லது ‘போலியானதா?’ என்பதை கண்டறிய, ஒரே ஒரு வழிமுறை தான் இருக்கின்றது. நமக்கு இருக்கக்கூடிய அதே வலி, உணர்வு, ஆசை, விருப்பம், எண்ணம் மற்றும் ஏக்கம் நம்மை காதலிக்கக்கூடிய எதிர் பாலுக்கும் இருக்க வேண்டும். தனக்கென்று ஒரு காதலியும், தனக்கென்று ஒரு காதலனும் இருக்கும்பொழுது, ஒரு சிலருடைய கவனம் தவறுதலாக வேறு ஒருவர் மீது போவதற்கு மிக முக்கியமான காரணம், அவர்களுக்கு அறம் மற்றும் பொருள் சம்பந்தமான ஆழமான மற்றும் நுட்பமான புரிதல் இல்லாதது தான்.

கள்ளக் காதல்

ஏனென்றால், வாழ்க்கையினுடைய அடித்தளம் என்று பார்க்கும்பொழுது, ‘அறம்’, ‘பொருள்’, ‘இன்பம்’ என்பதே அவ்வாழ்க்கையின் மூன்று காரணிகள் ஆகும். இந்த மூன்று காரியங்களில், அறத்துப்பாலையும், பொருட்பாலையும் நாம் புரிந்துக்கொண்டோம் என்றால்,  இன்பத்துப்பாலை பற்றியும் நமக்கு புரிதல் ஏற்படும். இன்பத்துப்பாலில், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கக்கூடிய, காதல் மற்றும் கலவியை பற்றி நம்முடைய வள்ளுவர் 250 குறள்களாக 25 அதிகாரங்களை இயற்றியிருக்கின்றார்.

அது மட்டுமில்லாமல், அறத்துப்பால் பிரிவில், ‘பிறனில் விழையாமை’ என்ற தலைப்பின் கீழ், ‘பிறன் மனைவியை விரும்பாமை’ என்ற அடிப்படையில், 10 விதமான காரியங்களை கொடுத்திருக்கின்றார். நம்முடைய வாழ்க்கையில், நம்முடைய எதிர்பாலுக்கு தெரியாமல், அதாவது நம்முடைய கணவன் அல்லது மனைவிக்கு தெரியாமல், நம்முடைய வாழ்க்கையில் நாம் எந்தவொரு காரியத்தில் ஈடுபட்டாலும், அந்த காரியம் நமக்கு நிறைவையும் தராது, நிம்மதியையும் தராது. போலிகளும், கலப்படங்களும் இந்த பூமியில் இருக்கலாம், ஆனால் வாழ முடியாது. நம்முடைய வாழ்க்கையில் எந்தவொரு நிலையிலும், நம்முடைய காதலுக்கும் நம்முடைய குடும்ப வாழ்க்கைக்கும் எதிரான செயல்பாடுகளில் நாம் ஈடுபடக் கூடாது.

நமக்கானதை அடைவதற்கும், அதை அனுபவிப்பதற்கும் நமக்கு உரிமை இருக்கின்றது. ஆனால், நம்முடையது அல்லாத எந்த ஒன்றின் மீதும் நமக்கு மோகமோ காதலோ ஏற்படக் கூடாது. அப்படி ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால், ‘அறத்துப்பால்’ மற்றும் ‘பொருட்பால்’ சம்பந்தமான காரியங்களை நாம் கற்று தெளிந்திருக்க வேண்டும். ஏனென்றால்,

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து

அறம்பொருள் கண்டார்கண் இல்

வருந்துங்கள்! திருந்துங்கள்! தெளிவடையுங்கள்! உங்களுடைய வாழ்க்கையில் நிறைவும், நிம்மதியும் நிச்சயம் இருக்கும்.

நன்றிகள்!

கள்ளக் காதல் : click here

நம்பாதே! : click here

beelive123

Chiselers Academy, One of the Best institute for E-Learning.Its mainly for UPSC and TNPSC aspirants.We all have certain dream in our life.some have a dream to Become a Doctor,Engineer,Lawyer,Teacher and etc.If you have a Dream to become and administrator like IAS.,IPS.,IRS.,we are here to show you the way to Know about it and achieve it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *