பழிவாங்காதே! கர்மா பார்த்துக்கொள்ளும்

பழிவாங்காதே! கர்மா பார்த்துக்கொள்ளும்

குறளின் குரல்! – திருக்குறள்

பதிவு எண்: 357    அதிகரம்: இல்லறவியல்  குறள் எண்: 205

பழிவாங்காதே! கர்மா பார்த்துக்கொள்ளும்

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்

இலனாகும் மற்றும் பெயர்த்து

விளக்கம்: இல்லை என்று யாருக்கும் கெடுதல் செய்யாதே. செய்தால், மேலும் இல்லாதவன் ஆவாய்!

இந்த உலகத்தில் எது ஒன்றும் வீணாகவோ அல்லது சாதரணமாகவோ நடக்காது. ஒவ்வொன்றிற்கும் ஒரு துவக்கம், தொடர்ச்சி, முடிவு நிச்சயம் இருக்கும். நம்முடைய வாழ்க்கையில் நாம் விதைக்கக்கூடிய விதை எந்த ரகத்தை சேர்ந்தது என்று காலம் நமக்கு காட்டி கொடுக்கும். அதே போன்று நம்மோடு பழகக்கூடிய மனிதர்களையும் காலம் நமக்கு காண்பிக்கும்.

‘யார் உண்மையானவர்கள்? யார் போலியானவர்கள்? யார் எப்போது எப்படி மாறுவாகள்? சந்தர்ப்பம் அமையும்போது நமக்கு என்ன செய்வார்கள்?’ – இப்படி எல்லாவற்றையும் காலமும் சூழலும் நமக்கு காட்டிக் கொடுக்கும். நம்முடைய வாழ்க்கையில் நாம் பலரை கடந்து செல்வோம். இதில் நமக்கு தெரியாமல் யாராவது நமக்கு தீமை செய்தாலோ, துரோகம் செய்தாலோ, நாம் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவோம்.

மற்றவர்களுக்கு தீமை செய்யக்கூடிய ஒவ்வொருவரும் ஏதோ சில காரணங்களை சொல்வார்கள். ‘இதனால் தான் நான் இப்படி செய்தேன், அதனால் தான் நான் இப்படி செய்தேன், எனக்கு வேறு வழி தெரியாததால் தான் நான் அப்படி செய்தேன்’ என்று பல விதமான காரணங்களை அடுக்குவார்கள். காரணங்கள் சொல்வதால் கள்ளிச்செடி தக்களிச்செடியாக மாறாது.

Free stock photo of adult, alone, beautiful
பழிவாங்காதே! கர்மா பார்த்துக்கொள்ளும்

நமக்கு ஒருவர் துரோகம் செய்துவிட்டார்கள் என்பதற்காகவோ அல்லது நமக்கு ஒருவர் தீங்கு செய்துவிட்டார் என்பதற்காகவோ, நாம் அவர்களை பழிதீர்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரு விஷயத்தை நம்முடைய வாழ்க்கையில் நாம் மிகவும் ஆழமாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

இந்த உலகத்தில் பல விதமான விதிகள் இருக்கின்றது. அதில் ஒன்று தான், ‘விதை விதைத்தவன் விதை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பது. எந்த ஒரு காரணத்தை கூறி நமக்கு யார் எந்த தீமையை செய்தாலும் சரி, நன்மையை செய்தாலும் சரி, அதற்கான பலன் ஏதாவது ஒரு விதத்தில் நிச்சயம் அவர்களை சென்று சேரும்.

இதை தான் நம்முடைய வள்ளுவர் பலாயிரம் வருடங்களுக்கு முன்னரே, இந்த ஒரு குறள் வழியாக நமக்கு சொல்லியிருக்கின்றார். அதாவது,

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்

இலனாகும் மற்றும் பெயர்த்து

என்று. மண்ணாயினும் சரி, மனமாயினும் சரி, நம் வாழ்வாயினும் சரி, நாம் எதை விதைக்கின்றோமோ, அதை தான் அறுவடை செய்வோம். இந்த ஒரு விஷயத்தை நம்முடைய வாழ்க்கையில் நாம் புரிந்துக்கொண்டோம் என்றால், பல விதமான மாறுபாடுகள் நம்முடைய வாழ்க்கையில் நிச்சயம் ஏற்படும்.

நன்றிகள்!

பழிவாங்காதே! கர்மா பார்த்துக்கொள்ளும் : click here

எல்லைக்குள் வாழ்ந்தால் தொல்லை இல்லை : click here

beelive123

Chiselers Academy, One of the Best institute for E-Learning.Its mainly for UPSC and TNPSC aspirants.We all have certain dream in our life.some have a dream to Become a Doctor,Engineer,Lawyer,Teacher and etc.If you have a Dream to become and administrator like IAS.,IPS.,IRS.,we are here to show you the way to Know about it and achieve it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *