மனம் தளராதே!

மனம் தளராதே!

குறளின் குரல்! – திருக்குறள்

மனம் தளராதே!

பதிவு எண்: 198     அதிகாரம்: அறன் வலியுறுத்தல்   குறள் எண்: 38

மனம் தளராதே!

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்

விளக்கம்: நாள் தவறாமல் அறம் செய்க, அது ஒருவன் பிறப்பு வழியை அடைக்கும் கல்லாகும்.

நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய நிறைய தத்துவங்கள் நம்முடைய திருக்குறளில் புதைந்திருக்கின்றது. அதற்காக தான் ‘தினம் ஒரு குறள்’ என்ற அடிப்படையில், நாம் இதுவரை நிறைய பதிவுகளை பார்த்திருக்கின்றோம். இந்த பதிவு நம்முடைய 198வது பதிவு. ‘அறன் வலியுறுத்தல்’ என்ற தலைப்பின் கீழ், ஐயன் கொடுத்திருக்கக்கூடிய ஒவ்வொரு குறளும் நம்முடைய அறம் சார்ந்த வாழ்க்கையை மையப்படுத்தியது.

‘அறம்’ என்றால், நமக்கும் நம்மை சார்ந்த உயிரினத்திற்கும் எது நன்மையாக அமையுமோ அந்த செயலில் , அந்த கடமையில் ஈடுபடுதல் என்று அர்த்தம். நம்முடைய வாழ்க்கை வழியாக நிறைய ஆரோக்கியமான மாற்றங்களை நம்மால் ஏற்படுத்த முடியும். சுயநலம் இல்லாமல், பொதுநல இலட்சியத்தோடு ஒரு இலக்கை நம்முடைய வாழ்க்கையில் நாம் எடுக்க வேண்டும். அந்த இலக்கு நம் மனதிற்கு மிகவும் பிடித்ததாக இருக்க வேண்டும். நாம் யாராக இருந்தாலும், எந்த சூழ்நிலையில் வாழ்ந்துக்கொண்டிருந்தாலும், நம் ஒவ்வொருவருக்குமே ஒரு விதமான இலக்குகள் நம் வாழ்க்கையில் இருக்கும். ஆரம்ப காலத்தில் முடியாது என்று சொல்லப்பட்ட நிறைய விஷயங்கள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வரலாற்றில் இடம் பிடித்திருக்கின்றது.

வெற்றி பெருவதற்கு என்ன வேண்டும் என்று கேட்கும் பொழுது, நிறைய விஷயங்களை நாம் குறிப்பிடுவோம். ‘தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு, நேரம் தவறாமை’ – இப்படி எண்ணற்ற விஷயங்களை குறிப்பிட்டாலும், மிகவும் முக்கியமான மறைவான ஒரு விஷயம், ‘தொடர்ந்து செயல்படுதல்’. இதை தான் நம்முடைய ஐயன் இந்த இடத்தில் குறிப்பிட்டிருக்கின்றார் – ‘வீழ்நாள் படாஅமை நன்றாற்றின்’ என்று. அதாவது நாள் தவறாமல் அறம் செய்ய வேண்டுமாம். ஒரு சில இலக்கை நாம் அடைய வேண்டும் என்று நினைத்து, ஒரு சில முயற்சிகளை நாம் எடுக்கும் பொழுது, பல விதமான தடைகளையும், மனிதர்களையும், சூழ்நிலைகளையும் கடந்து தான் நாம் போக வேண்டும்.

Nature, Rock, Rise, Sky, Travel, Mountain, Summer
மனம் தளராதே!

அது தான் எதார்த்த வாழ்க்கை. நாம் வாழும் வாழ்க்கை மிகவும் அழகானது. தேவையற்ற எண்ணங்களால் நாம் இதை வீணடிக்கக் கூடாது. ‘தோற்றுவிடுவோமோ?’ என்ற எண்ணம், முழுமையான தோல்விக்கு சமமாகும். ‘நிச்சயம் வெற்றிபெறுவோம்’ என்ற எண்ணம், பாதி வெற்றிக்கு இணையாகும். நேர்மறையாக சிந்திப்பதால் வெற்றி கிடைக்குமா? என்ற ஒரு கேள்வி கேட்கும் பொழுது, உறுதியாக சொல்ல முடியாது. ஏனென்றால், சில வெற்றிகள், சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலைகளைப் பொருத்தது. ஆனால், எதிர்மறையாக சிந்திக்கும் பொழுது நிச்சம் தோல்வி அடைவோம் என்று உறுதியாக சொல்லலாம். நாம் தோல்வியடைவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், மிகவும் முக்கியமான ஒரு காரணம், மனதிற்கு பிடித்த ஒரு வாழ்க்கையை வாழாதது தான். நம்முடைய சமூக அமைப்பு சில நேரங்களில் வினோதமானது. ஆமையை தரையில் விட்டு விட்டு அதனுடைய வேகத்தை அளக்கும்.

ஆனால், நாம் மறந்துவிடுகின்றோம், ஆமை நீரில் இருக்கும்பொழுது தான் அதனுடைய வேகம் என்ன என்பது நமக்கு தெரியும். ஆமை ஒரு இருவாழ் உயிரி. தரையை விட நீரில் தான் அதன் முழு ஆற்றலை வெளிப்படுத்தும். நமக்கும் நமக்கான இடம் எது? களம் எது? மனிதர்கள் யார்? என்று புரிந்து செயல்பட வேண்டும். நமக்கு பிடித்த பாதையில் பயணிக்கும்பொழுது தான் நம்முடைய ஆற்றலும், அறிவும் முழுமையாக வெளிப்படும். அப்படி நமக்கு பிடித்த ஒரு நல்ல அர்த்தமுள்ள வாழ்க்கையை நாம் வாழும்பொழுது சில விதமான சங்கட்டங்களை நாம் சந்திக்க வேண்டிய தேவை ஏற்படும்.

நிறைய நபர்கள் கேட்கக்கூடிய பொதுவான ஒரு கேள்வி, ‘பிடித்த பாதையில் வாழும்பொழுது வலிகள் இருக்காதா?’ என்பது தான். அதற்கான பதில், ‘நிச்சயம் இருக்கும்’ என்பது தான். ஆனால் அந்த வலிகளை நம்முடைய மனம் ஆனந்தமாக ஏற்றுக்கொள்ளும், எல்லாவற்றையும் கடந்து செல்லும். எந்த சூழலிலும் நாம் பின்வாங்கக் கூடாது. நம்முடைய நம்பிக்கையை மட்டும் நாம் கைவிட்டுவிடக் கூடாது. காரணம், ‘அற்புதங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் நிகழலாம்’. மனசோர்வுகளும், தடுமாற்றங்களும் தடைகளும் ஏற்படுவதென்பது, எதார்த்தமான சில விஷயங்கள்.

அதற்காக நாம் தேர்ந்தெடுத்த, அறம் சார்ந்த சிந்தனைகள், அறம் சார்ந்த கடமைகளை நாம் கைவிட்டுவிடக் கூடாது. மனதிற்கு பிடித்த அறம் சார்ந்த சிந்தனையில் நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும். அதற்காக தான் நம்முடைய ஐயன் இந்த விதமான அறிவுரையை நமக்கு கொடுத்திருக்கின்றார்.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்

என்று.

நன்றிகள்!

மனம் தளராதே! : click here

அடுத்தவர்களிடம் எதிர்பார்ப்பது வீண்! : click here

beelive123

Chiselers Academy, One of the Best institute for E-Learning.Its mainly for UPSC and TNPSC aspirants.We all have certain dream in our life.some have a dream to Become a Doctor,Engineer,Lawyer,Teacher and etc.If you have a Dream to become and administrator like IAS.,IPS.,IRS.,we are here to show you the way to Know about it and achieve it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *