போனது போகட்டும். இனியாவது வாழ்!

போனது போகட்டும். இனியாவது வாழ்!

குறளின் குரல்! – திருக்குறள்

பதிவு எண்: 336 அதிகாரம்: ஊக்கமுடைமை குறள் எண்: 595

போனது போகட்டும். இனியாவது வாழ்!

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்து அனையது உயர்வு

விளக்கம்: நீர்பூக்களின் காம்பின் நீளம் அவை நிற்கும் நீரின் அளவை சார்ந்ததாகும். அதுபோல், மக்களின் வாழ்க்கை உயர்வு அவர்களுடைய ஊக்கத்தின் அளவை சார்ந்தது.

வாழ்க்கை சார்ந்த மேன்மையை உண்மையை இந்தக் குறளின் வழியாக இன்றைக்கு நாம் உணரலாம். பேரறிஞர் அண்ணா அவர்கள், ஒருமுறை மலேசியா சென்றிருந்த பொழுது, அங்கு இருக்கக்கூடிய மக்களை மேன்மைபடுத்துவதற்காக, ஒரு விஷயத்தை தெரியபடுத்தினார். அதாவது, உலகம் முழுவதும் தமிழர்கள் இருக்கின்றார்கள் ஆனால், மலேசியாவில் மட்டுமே தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்ற ஒரு விஷயத்தை தெரியபடுத்தினார்.

வெறுமனே இருப்பதற்கும் வாழ்வதற்கும் நிறைய வேறுபாடுகளும், வித்தியாசங்களும் இருக்கின்றன என்பதை தான் இந்த ஒரு வாக்கியம் நமக்கு தெரியபடுத்துகிறது. யாராவது உங்களிடம் விளை உயர்ந்த ரூபாய் தாளை கொடுத்து, அதைக் குப்பையில் வீசச் சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்? நம் யாருக்குமே விளை உயர்ந்த ரூபாய் தாளை குப்பையில் வீச மனம் இருக்காது. ஏனென்றால், விளை உயர்ந்த ரூபாய் நோட்டின் மதிப்பு என்னவென்று நமக்கு தெரியும். அதைக்கொண்டு என்னவெல்லாம் வாங்க முடியும் என்றும் நமக்கு தெரியும்.

Beauty, Flower, Lotus, Meditation, Peace
போனது போகட்டும். இனியாவது வாழ்!

பணத்தின் மதிப்பு தெரியும் நமக்கு, அதை அடைய உதவும் நம் வாழ்நாட்களின் மதிப்பு சில நேரங்களில் நமக்கு தெரிவதில்லை. கடந்த நாட்களில் எதையாவது இழந்துவிட்டீர்களா? பரவாயில்லை, அதை மீட்டுவிடலாம். கடந்த நாட்களில் யாரையாவது பிரிந்துவிட்டீர்களா? பரவாயில்லை மீண்டும் இணைந்துக்கொள்ளலாம். ஏதாவது ஒன்றிற்காக முயன்று, தோற்றுவிட்டீர்களா? பரவாயில்லை மீண்டும் முயன்று எதிர்பார்க்கும் வெற்றியை எட்டிவிடலாம். இதையெல்லாம் நாம் செய்ய வேண்டும் என்றால், நம் உள்ளம் உறுதியாக இருக்க வேண்டும், உயிர்ப்புடன் இருக்க வேண்டும். அதைவிட மிக முக்கியமானது, நாம் உயிரோடு இருக்க வேண்டும்.

உயிரோடு இருக்க வேண்டும் என்றால், ஏதோ சுவாசத்தை உள்ளே இழுத்து, வெளிவிடும் நிகழ்வு இல்லை. உயிரோடு இருப்பதென்பது, புத்துணர்வோடும், புது தெளிவோடும், உத்வேகத்தோடும், உற்சாகத்தோடும், புது நம்பிக்கையோடும், சரியான எதிர்பார்ப்புகளோடும், திட்டமிட்ட கனவுகளோடும் இருப்பதென்பது தான் உயிரோடு இருப்பது ஆகும். மற்ற அனைத்து நிலைகளும் மரணித்த நிலைகளே ஆகும். வெறுமனே சுவாசிப்பதில் எந்தவொரு அர்த்தமும் இல்லை. நாம் உயிரோடு இருக்க வேண்டும், நம் உள்ளத்தில் ஊக்கங்கள் நிறைந்திருக்க வேண்டும்.

நாம் யாராக இருந்தாலும் சரி, நம் வாழ்வின் உயரம் நம் உள்ளத்தில் பொதிந்துள்ள ஊக்கத்தின் உயர்வை சார்ந்து தான் அமையும். இதை தான் நம் வள்ளுவர் கூறியிருக்கின்றார் –

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்து அனையது உயர்வு

என்று. சோர்வு ஏற்படும் பொழுதோ, அல்லது வாழ்க்கையில் தளர்வு ஏற்படும்பொழுதோ இந்த சிந்தனைகளை மீண்டும் சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கு புது உத்வேகம் நிச்சயம் கிடைக்கும்.

நன்றிகள்!

போனது போகட்டும். இனியாவது வாழ்! : click here

குற்ற உணர்வில் இருக்கும்போது இதைக் கேள்! : click here

beelive123

Chiselers Academy, One of the Best institute for E-Learning.Its mainly for UPSC and TNPSC aspirants.We all have certain dream in our life.some have a dream to Become a Doctor,Engineer,Lawyer,Teacher and etc.If you have a Dream to become and administrator like IAS.,IPS.,IRS.,we are here to show you the way to Know about it and achieve it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *