நீ படும் கஷ்டம் வீண்போகாது!

நீ படும் கஷ்டம் வீண்போகாது!

குறளின் குரல்! – திருக்குறள்

நீ படும் கஷ்டம் வீண்போகாது!

பதிவு எண்: 337 அதிகாரம்: படைசெருக்கு குறள் எண்: 776

நீ படும் கஷ்டம் வீண்போகாது!

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்

வைக்கும்தன் நாளை எடுத்து

விளக்கம்: கடந்து போன தன் வாழ்நாட்களை எல்லாம் எடுத்து எண்ணி, அவற்றுள் போரில் புண்படாத நாட்களை எல்லாம் வீணாகக் கழித்த நாட்களோடு சேர்ப்பான் உண்மை வீரன்.

வாழ்வியல் சார்ந்த ஒரு உண்மையை இந்தக் குறளின் வழியாக இன்றைக்கு நாம் தெரிந்துக் கொள்ளலாம். ஒரு ஊரின் வழி சென்ற ஒரு முனிவர் அந்த ஊர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒரு கேள்வியைக் கேட்டார். திரண்டிருந்த பெருங்கூட்டத்தைப் பார்த்து உங்களில் யார் யார் சொர்க்கத்திற்குப் போக விரும்புகின்றீர்கள்? என்று கேட்டார். எல்லோருமே கை தூக்கினார்கள். யார் யார் சாக விரும்புகின்றார்கள்? என்று தனது அடுத்தக் கேள்வியைக் கேட்டார் அந்த முனிவர். ஒரு கையும் உயரவில்லை. பின்பு எப்படி சொர்க்கத்திற்கு போவீர்கள் என்று அவர் கேட்டதும், எல்லோரும் முழித்தார்கள். நம்முடைய வாழ்க்கையிலும் இப்படி தான்.

ஆசைப்படுவோம் ஆனால், ஆசைப்பட்டவைகளை அடைவதற்கான முயற்சியில் ஈடுபட மாட்டோம், அதற்கான விருப்பத்தையும் நம்முடைய மனதில் நாம் வைக்கமாட்டோம். நம் வாழ்க்கையில் எந்த ஒரு ஆசை, கனவு, இலட்சியத்தை நாம் தேர்வு செய்தாலும், அதற்கான கடினமான பாதையை நாம் கடந்து தான் போக வேண்டும்.

வலிக்கவே கூடாது என்றால்,  நாம் வாழவேக் கூடாது. ஒரு சில சரியான வலிகளை நாம் நம்முடைய வாழ்க்கையில் அனுபவித்தால் மட்டுமே நாம் என்னும் எண்ணம் நமக்கு ஈடேறும். எளிமையாக இருக்கின்றது என்பதற்காக, மனதிற்கு பிடிக்காத ஒரு பாதையில் பயணிப்பதும் தவறு, கடினமாக இருக்கின்றது என்பதற்காக, மனதிற்கு பிடித்த ஒரு பாதையில் பயணிக்காமல் இருப்பதென்பதும் தவறு.

நீ படும் கஷ்டம் வீண்போகாது!

நாம் வாழும் வாழ்வில் கஷ்டத்தைப் பார்த்தால் எந்த ஒரு நல்ல காரியத்தையும் நம்மால் செயல்படுத்த முடியாது. இஷ்டப்பட்டு செய்தோம் என்றால், எதுவுமே நமக்கு கஷ்டமாக தெரியாது. அனைத்துமே நமக்கு எளிமையாக கிடைத்துவிட்டால், வாழும் வாழ்வில் சுவாரசியங்களும் இல்லை, நாம் அடையப்போகும் காரியத்தை பற்றிய மதிப்பீடுகளோ நமக்கு இல்லாமல் போகும். நம் வாழ்வில் நாம் அனுபவிக்கக்கூடிய வலிகள், கடக்கும் கடினமான சூழல்கள் – இவை அனைத்துமே நம்மை உறுதிக் கொண்டவர்களாக மாற்றும். இழப்புகளை நினைத்தோ, வலிகளை நினைத்தோ, அடைந்த துன்பங்களை நினைத்தோ நாம் வருந்தக்கூடாது.

அனைத்துமே, ஏதோ ஒரு விதத்தில் நம்மை பக்குவப்படுத்தியிருக்கும், நம்மை வலிமையானவர்களாக மாற்றியிருக்கும். அதை எண்ணி நாம் மனமகிழ்ச்சி அடைய வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் நாம் அடையக்கூடிய ஒவ்வொரு வலிகளும், ஏதோ ஒன்றை நமக்கு உணர்த்தும். வலிக்காத நாட்கள் எல்லாம் வாழ்வின் வீணான நாட்கள் என்று நாம் கருத வேண்டும். இது தான் நம் வள்ளுவர் குறிப்பிடக்கூடிய உண்மை வீரனின் அடையாளம்.

போரில் ஏற்பட்ட ஒவ்வொரு காயங்கள் தான் உண்மை வீரரை பக்குவப்படுத்தும். அதுபோல தான் நம் வாழ்விலும், நாம் அனுபவிக்கக் கூடிய ஒவ்வொரு வலிகளும், நாம் கடந்து போகும் ஒவ்வொரு சூழல்களும் ஏதோ ஒன்றை நமக்கு உணர்த்தும். எனவே, நாம் எடுக்கக்கூடிய எந்த ஒரு முயற்சியிலும் மனம் தளராமல் நாம் தொடர்ந்து ஈடுபட வேண்டும். ஏனென்றால், நம் வள்ளுவர் கூறியிருக்கின்றார்,

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்

வைக்கும்தன் நாளை எடுத்து

நம்முடைய வாழ்க்கையில் நாம் பின்னோக்கி திரும்பிப் பார்த்தால், நாம் அனுபவித்த ஒவ்வொரு வலிகளும், நாம் கடந்து வந்த ஒவ்வொரு சூழல்களும் நம்மை முன்னோக்கி உந்தித்தள்ளக் கூடியதாக இருக்கும். மீண்டும் உங்களுடைய தனிமையில் இந்த சிந்தனைகளை சிந்தித்துப் பாருங்கள். இன்னும் எண்ணற்ற விஷயங்கள் உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும்.

நன்றிகள்!

நீ படும் கஷ்டம் வீண்போகாது! : click here

தேவையற்ற சில நினைவுகளை அழி! : click here

beelive123

Chiselers Academy, One of the Best institute for E-Learning.Its mainly for UPSC and TNPSC aspirants.We all have certain dream in our life.some have a dream to Become a Doctor,Engineer,Lawyer,Teacher and etc.If you have a Dream to become and administrator like IAS.,IPS.,IRS.,we are here to show you the way to Know about it and achieve it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *