நல்லவர்களை தேடி வாழ்வை வீணடிக்காதீர்கள்!

நல்லவர்களை தேடி வாழ்வை வீணடிக்காதீர்கள்!

குறளின் குரல்! – திருக்குறள்

நல்லவர்களை தேடி வாழ்வை வீணடிக்காதீர்கள்!

பதிவு எண்: 320 அதிகாரம்: இனியவைகூறல் குறள் எண்: 100

நல்லவர்களை தேடி வாழ்வை வீணடிக்காதீர்கள்!

இனிய உளவாக இன்னாத கூறல்

கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

விளக்கம்: இனிய சொற்கள் இருக்கும்போது, அவற்றைக் கூறாமல், கடுஞ்சொற்களைக் கூறுவது, கனிகள் இருக்கும்போது காய்களைப் பறித்து தின்பது போன்றது.

வள்ளுவர் சொல்லியிருக்கக்கூடிய இந்தக் குறள், பேசக்கூடிய வார்த்தைகளுக்கு மட்டும் கிடையாது, வாழக்கூடிய வாழ்க்கைக்கும் மிகவும் அழகாக பொருந்தக்கூடிய அற்புதமான ஒரு குறள். நம்முடைய வாழ்க்கையில் ஒரு சில உறவுகளும் மனிதர்களும் நமக்கு எதிரானவர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்கள் நம்முடைய நெருங்கிய உறவாக இருப்பதால், அவர்களை பிரிய முடியாத, விட்டு விலக முடியாத நிர்பந்தத்தில் நாம் சிக்கித் தவிப்போம்.

அப்படி தவிக்கக்கூடிய ஒரு வாழ்க்கையில், நிறைவான வாழ்க்கை நமக்கு வேண்டுமென்றால், இந்தக் குறளின் மறைப்பொருளை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் நமக்கு சிலர் சொல்லக்கூடிய அறிவுரை – “நல்லவர்களோடும், நல்ல மனிதர்களோடும் மட்டும் தான் நாம் பழக வேண்டும், வாழ வேண்டும். தீயவர்களை நாம் புறம் தள்ள வேண்டும். அவர்களோடு எந்தவொரு பழக்கத்தையும் நாம் ஏற்படுத்தக் கூடாது.” என்பது.

ஆனால் பழகியப் பின்னரே, ஒரு சில மனிதர்களின் அல்லது உறவுகளின் உண்மை வடிவத்தை வாழ்க்கை நமக்கு காண்பிக்கும். அப்படியே நாம் ஒரு உறவில் உள்ள தீய குணத்திற்காகவும், நமக்கு பிடிக்காத குணத்திற்காகவும் அவர்களை நாம் பிரிய வேண்டுமென்றால், வாழ்க்கையில் நாம் யாரோடும் உறவாடவோ, பழகவோ முடியாது. ஏனென்றால், எல்லோரிடத்திலும் ஏதோ சில குறைகள் தேவையற்ற குணங்கள் நிச்சயம் இருக்கும்.

நல்லவர்களை தேடி வாழ்வை வீணடிக்காதீர்கள்!

வாழ்க்கையில் முழுமையான நல்லவர்களை நாம் தேட வேண்டுமென்றால், நம்முடைய வாழ்க்கை முழுவதும் நாம் தேடிக்கொண்டே தான் இருக்க வேண்டும். நாம் வாழக்கூடிய வாழ்க்கையில், நல்லவர்களை தேடுவதைவிட, எல்லோரிடத்திலும் இருக்கும் நல்ல குணங்களைத் தேடினால் நம் வாழ்வு நிறைவாக இருக்கும். எல்லாவற்றிலும் இருக்கக்கூடிய நல்லததை மட்டுமே பார்க்கும் குணமும், எல்லோரிடத்திலும் இருக்கக்கூடிய நல்லதை மட்டுமே பார்க்கக்கூடிய பண்பும் நமக்கு வந்துவிட்டால், நாம் வழக்கூடிய இந்த வாழ்க்கை அதிஅற்புதமாக நமக்கு மாறிவிடும்.

சாகும் நாள் தெரிந்துவிட்டால், வாழும் நாள் நரகமாகும் என்பது போல, நம்மை சுற்றியுள்ள மனிதர்களிடம் இருக்கும் கெட்டவைகளை மட்டுமே நாம் பார்த்துக்கொண்டு வாழ்ந்தால், நம்மால் நிச்சயம் அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ முடியாது. வேப்பமரம் என்றதும், அதன் கசப்புத் தன்மை மட்டும் தான் நமக்கு நினைவிற்கு வரும். ஆனால் அதில் உள்ள பூவிலும் சிறு தேன் துளி உண்டு என்பதை வண்டுகளும், தேனீக்களும் மட்டும் தான் அறியும்.

அந்த விதமான அறிதல் மட்டும் தான் நம்முடைய வாழ்க்கையை மேன்மைப்படுத்தும். நல்ல வார்த்தைகள் இருக்கும்பொழுது, கெட்ட வார்த்தைகளை நாம் பயன்படுத்தக் கூடாது. அதேபோல தான், எல்லோரிடத்திலும் நன்மையான சில காரியங்கள் இருக்கும்பொழுது, அவர்களிடத்தில் இருக்கக்கூடிய தீமையான காரியங்களை மட்டுமே நாம் பார்த்துக் கொண்டிருந்தால், நம்முடைய வாழ்க்கையில் அமைதியும், நிம்மதியும் நிச்சயம் இருக்காது.

நல்லவர்களை நாம் தேடிக் கொண்டே இருப்பதைவிட, ஒவ்வொருவரிடத்திலும் இருக்கக்கூடிய நன்மையான காரியங்களை நாம் தேடினால், நம்முடைய வாழ்க்கையில் நிச்சயம் அமைதி இருக்கும், நிம்மதி இருக்கும். இதை தான் நம்முடைய வள்ளுவர், “கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று” என்று கூறியிருக்கின்றார்.

இனிய உளவாக இன்னாத கூறல்

கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

எல்லாவற்றிலும், எல்லோரிடத்திலும் நன்மையான காரியங்கள் அனேகம் இருக்க, தீமையான காரியங்களை மட்டுமே பார்ப்பதால், நமக்கு என்ன பலன்?

நன்றிகள்!

நல்லவர்களை தேடி வாழ்வை வீணடிக்காதீர்கள்! : click here

நீ இதுவரை அறியாத சில மர்மங்கள்! : click here

beelive123

Chiselers Academy, One of the Best institute for E-Learning.Its mainly for UPSC and TNPSC aspirants.We all have certain dream in our life.some have a dream to Become a Doctor,Engineer,Lawyer,Teacher and etc.If you have a Dream to become and administrator like IAS.,IPS.,IRS.,we are here to show you the way to Know about it and achieve it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *