காமத்தில் மூழ்காதே.வாழ்வை இழப்பாய்!

காமத்தில் மூழ்காதே.வாழ்வை இழப்பாய்!

குறளின் குரல்! – திருக்குறள்

பதிவு எண்: 340 அதிகாரம்: படர்மெலிந்து இரங்கல் குறள் எண்: 1166

காமத்தில் மூழ்காதே.வாழ்வை இழப்பாய்!

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்

துன்பம் அதனிற் பெரிது

விளக்கம்: காமம் மகிழ்விக்கும் போது, அதன் இன்பம் கடல் போன்றது. அது வருத்தும் போது, அதன் துன்பமோ கடலை விட பெரியது.

நிகழ்காலத்தில் காமம் மற்றும் காதல் பற்றிய புரிதலை ஏற்படுத்துவதற்காக, தொடர் பதிவுகளை நாம் ஆரம்பித்தோம். இது நம்முடைய மூன்றாவது பதிவு. நம் சிந்தனையில் நமக்கு ஏற்படும் தெளிவு மட்டுமே, நம் வாழ்வில் ஏற்படும் சில பிரச்சனைககளுக்கு தீர்வாக அமையும்.

உடலின் ஒரு அங்கம் நாக்கு. சிலர் உணவு உண்ணும் பொழுது, அந்த நாக்கை திருப்திபடுத்த மட்டுமே உண்பார்கள். அதனால் தான், அவர்களின் உடல் தேவையற்ற உபாதைகளில் சிக்கிக் கொள்ளும். ஏனென்றால், நம் நாக்கிற்கு அறுசுவைகளில் ஒரு சில சுவைகள் பிடிக்காது, ஒரு சில சுவைகள் அதிகம் பிடிக்கும். நாக்கை மட்டுமே திருப்திபடுத்த நினைக்கும் நம் வாழ்வு, நிச்சயம் ஒருநாள் வலிகளும், வேதனைகளும் நிறைந்ததாக மாறும்.

இந்தக் கூற்று நாக்கிற்கு மட்டுமல்ல, உடல் உறுப்புகள் எல்லாவற்றிற்குமே பொருந்தும். நீண்ட நேரம் நடந்தால், கால்கள் வலிப்பது போல், நீண்ட நேரம் விழித்திருந்தால் கண்கள் வலிப்பது போல், ஒவ்வொரு உறுப்புகளுமே ஒரு அளவிற்கு மேல் நமக்கு சில வலிகளை உணர்த்தும். அதனதன் தேவைக் கருதி, ஒவ்வொன்றையும் சரியான கால நேர அளவிற்கு நாம் பயன்படுத்த வேண்டும்.

வெறும் ஒரு உணவு, வெறும் ஒரு உணர்வு, வெறும் ஒரு உறுப்பு, வெறும் ஒரு உறவு, வெறும் ஒரு விஷயத்திற்காக நாம் வாழ்வது என்பது, நம் வாழ்வின் பலவீனமாக மாறும். இது எல்லோருக்குமே பொருந்தும். வாழ்வு என்பது பல விதமான கலவைகள், பகுதிகள் மற்றும் அங்கங்கள் நிறைந்தது. ‘அன்பு, நட்பு, காதல், பகிர்வு, பாசம், நேசம், குடும்பம், சமூகம், நல்லெண்ணம், நற்சிந்தனை, கருணை, வீரம், மானம், மரியாதை, உடல், மனம், உளவியல், சுற்றம், சூழல், கல்வி’ – என்பது போன்ற பல காரியங்கள் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும்.

இதில் வெறும் காதல் மட்டுமே வாழ்வென்றாலும், வெறும் காமம் மட்டுமே வாழ்வென்றாலும் நிச்சயம் நம்மால் வாழ முடியாது. இன்று நாம் இன்பம் என்று நினைக்கும் அதே காரியம், சரியாக நாம் புரிந்துக்கொள்ளவில்லை என்றாலும், சரியாக நாம் கையாளவில்லை என்றாலும் அதே காரியங்கள் நாளைக்கு மிகப்பெரிய துன்பமாக மாறும். செடி வளர வெளிச்சமும், வெப்பமும் தேவை தான்.

அந்த வெளிச்சமும், வெப்பமும் அதிகமாக இருந்தால், செடி கருகிப்போய்விடும். மண் தேவை தான். ஆனால், அந்த மண்ணைக் கொட்டி செடியை மூழ்கடித்துவிடக் கூடாது. இந்த விதமாக தான், நாம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய காரியங்களை கையாள வேண்டும்.

மிக முக்கியமாக, காதல் மற்றும் காமம் சார்ந்த காரியங்களை நாம் மிகவும் கவனமாக கையாள வேண்டும். அளவிற்கு மீறினால் மட்டுமல்ல, வரம்பு மீறினலும் கூட அமிர்தமும் நஞ்சாகும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். இந்த விதமாக நாம் உணர வேண்டும் என்பதற்காக தான், நம் வள்ளுவர் இந்த அறிவுரையை நமக்கு கொடுத்திருக்கின்றார்.

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்

துன்பம் அதனிற் பெரிது

என்று. இன்று நமக்கு இன்பமாக இருக்கக்கூடிய காரியங்கள், நாளை துன்பமாக மாறுவதும், இன்று நமக்கு துன்பமாக தெரியும் காரியங்கள் நாளை இன்பமாக மாறுவதும் நம்முடைய அணுகுமுறையில் தான் இருக்கின்றது.

நம்முடைய வாழ்க்கையில் நிறைய காரியங்கள் இருக்கும்பொழுது, ஏன் ஒரு சிலரின் கவனம் காதல் மற்றும் காமத்தில் மட்டும் மூழ்கிக் கிடக்கின்றன? இதற்கான விளக்கத்தை நாம் அடுத்தப் பதிவில் பார்க்கலாம்.

நன்றிகள்!

காமத்தில் மூழ்காதே.வாழ்வை இழப்பாய்! : click here

18 வயது கடந்தவர்கள் மட்டும் இதை படிக்கவும்! : click here

beelive123

Chiselers Academy, One of the Best institute for E-Learning.Its mainly for UPSC and TNPSC aspirants.We all have certain dream in our life.some have a dream to Become a Doctor,Engineer,Lawyer,Teacher and etc.If you have a Dream to become and administrator like IAS.,IPS.,IRS.,we are here to show you the way to Know about it and achieve it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *