மகிழ்சியாக வாழ்!

மகிழ்சியாக வாழ்!

குறளின் குரல்! – திருக்குறள்

பதிவு: 185 அதிகாரம்: ஊக்கமுடைமை குறள் எண்: 593

மகிழ்சியாக வாழ்!

ஆக்கம் இழந்தோமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.

விளக்கம்:
ஊக்கத்தை திண்ணமாக கையில் கொண்டவர் செல்வம் போயிற்றே என்று வருந்தார்.

வாழ்வை மேம்படுத்தக் கூடிய நிறைய விஷயங்கள் நம்முடைய திருக்குறளில் இருக்கிறது. ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு குறள் வீதம் பார்த்துக் கொண்டு வருகிறோம். இன்றைக்கு நாம் பார்க்க போகிறது 185வது பதிவு. ஊக்கமுடைமை என்ற தலைப்பிற்கு கீழ் வரக் கூடிய குறள்களிலிருந்து வாழ்வை மாற்றக் கூடிய நிறைய விஷயங்களை பார்த்துக் கொண்டு வருகிறோம்.

Woman Using Umbrella With Lights
மகிழ்சியாக வாழ்!

ஊக்கமுடைமை என்ற ஒரு விஷயம் ஐந்து அடிப்படை விஷயங்களை சார்ந்து இயங்கும் என்று சொல்லியிருந்தோம். தன்னம்பிக்கை, உற்சாகம், எதிர்பார்ப்பு, ஆற்றம், மகிழ்ச்சி இந்த ஐந்து காரியத்தின் சங்கமம் தான் ஊக்கமுடைமை. இதில் தன்னம்பிக்கையை பற்றி நேற்றைய குறளில் பார்த்திருந்தோம். இன்றைக்கு மகிழ்ச்சியை பற்றிய சில விஷயங்களை புரிந்துக் கொள்ளலாம்.

மகிழ்சியோடு இருக்கும் மனநிலை

மகிழ்ச்சிக்கும், இன்பத்திற்கும் நிறையவே வேறுபாடுகள் இருக்கிறது. நிறைவாய் செய்யாத செயல் நிம்மதியை அளிக்காது. அது போல் தான் மனமகிழ்ச்சியாக செய்யாத செயலும் நல்மாற்றங்களை ஏற்படுத்தாது. நாம் எதிர்பார்க்கின்ற ஒரு விஷயம் நடந்தாலோ இல்லை நாம் ஆசைபடுகின்ற ஒரு விஷயம் நமக்கு கிடைத்தாலோ நாம் மகிழ்ச்சியாக இருப்போம் என்று நாம் நினைக்கின்றோம். கிடைத்ததற்கு பிறகு தான் மகிழ்ச்சி என்று நாம் நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும் மனமகிழ்ச்சியற்ற நிலையில் தான் நாம் இருப்போம்.

ஒரு விஷயம் கிடைத்தாலோ இல்லை நாம் எதிர்பார்க்கின்ற ஒரு விஷயம் நடந்தாலோ தான் மகிழ்ச்சி என்றால் அது ஒரு அர்ப்ப எண்ணம் . ஏனென்றால், அந்த விதமான மகிழ்ச்சி என்பது எல்லாராலும் முடியும். கிடைத்தால் மகிழ்வேன் என்பது அர்ப்ப எண்ணம். மகிழ்ச்சியோடு இருந்தால் தான் எல்லாம் கிடைக்கும் என்பது தான் அற்புதமான ஒரு எண்ணம். இருப்பதை இருப்பதாகவே சொல்வதற்கு தனிப்பட்ட மனநிலை தேவையில்லை. ஆனால், இருப்பதை வேறொன்றாக மாற்றுவதற்கு தனிப்பட்ட மனநிலை ரொம்பவே முக்கியம்.

அதில் குறிப்பிட தக்கது தான் மகிழ்ச்சியோடு இருக்கக் கூடிய மனநிலை. நிறைய நேரங்களில் நாம் ஒரே விதமான நகைச்சுவைக்கு திரும்பத் திரும்ப சிரிக்க மாட்டோம். ஆனால், ஒரே விதமான கவலை, பிரட்சனைகளுக்கு திரும்பத் திரும்ப வருத்தம் அடைவோம். வெளிச்சம் வரும் பொழுது எப்படி இருள் மறைகிறதோ அது போல் தான் கவலை, கஷ்டம், பிரச்சனை என்று நாம் நினைக்கும் பொழுது நம் மனமகிழ்ச்சி நம் மனதில் இருந்து மறைந்துவிடும்.

நீயாக இருக்க பழகு

தான் யார், தன்னிடம் என்ன இருக்கிறது, தன்னால் என்ன முடியும் என்பதை உணர்ந்து அதற்கேற்ற ஒருவாழ்வை வாழும் பொழுது தான் நமக்கு மகிழ்ச்சி கிடைக்கும். நிறைய நேரங்களில், நாம் அடுத்தவர் போல் வாழ ஆசைப்படும் பொழுது தான் நாம் எதிர்பார்கின்ற மகிழ்ச்சியான ஒரு மனநிலை நமக்கு கிடைக்காமல் போகிறது. நிறைய நேரங்களில் நாம் அடுத்தவர் போல் வாழ வேண்டும், அடுத்தவர் போல் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதனால் தான் நம்முடைய மனமகிழ்ச்சி பாதிப்பிற்குள்ளாகும்.

அடுத்தவர்களை பற்றிய சிந்தனையிலிருந்து வெளிவந்து, நடந்து முடிந்தவை பற்றிய கவலைகளை துறந்து, இருப்பதிலும், இனி வரவிருப்பதிலும் முழுமையான நிறைவோடும், நம்பிக்கையோடும் இருப்பது தான் நம்முடைய மகிழ்ச்சியை தக்க வைப்பதற்கான மிக சிறந்த வழிகள். இயற்கையை நேசிப்பது, பிற உயிர்களை மதித்து நடப்பது, தன்னிலை உணர்வது, தகுந்தவர்களோடு வாழ்வது, இயலாதவர்களுக்கு இயன்றதை செய்வது, இது எல்லாமே மழிச்சிக்கான வழியை நமக்கு காண்பிக்கும்.

நம்மிடம் இருப்பதை நேசித்து, நமக்கு என்ன தேவையோ அதை நோக்கி ஓடும் வாழ்க்கையில், செய்கின்ற ஒவ்வொரு செயலையும் பிடித்து செய்கின்றோம் என்றால் மகிழ்ச்சி ஒவ்வொரு நாளைக்குமே நமக்கு கிடைக்கும். மகிழ்ச்சியான மனநிலையில் ஒரு விஷயத்தை நாம் செய்யும் பொழுது, நாம் எதிர்பார்க்கின்ற வெற்றி நமக்கு நிச்சயம் கிடைக்கும். அப்படி கிடைக்கக் கூடிய ஒரு வெற்றி மிகப் பெரிய ஊக்கமாக மாறும். அதனால் தான் வள்ளுவர் இந்த வார்த்தையை இங்கு குறிப்பிட்டிருக்கிறார். “ஊக்கத்தை… வருந்தார்.”

உண்மையான மகிழ்ச்சி என்ன என்பதில் நமக்கு தெளிவு தேவை. அந்த தெளிவு நமக்கு கிடைத்த பிறகு அந்த மகிழ்ச்சியை தக்க வைப்பதற்கான வழிமுறைகளை நாம் ஒவ்வொரு நாளும் கடைபிடிக்கிறோம் என்றால் நாம் எதிர்பார்க்கின்ற மனமகிழ்ச்சி என்றென்றைக்குமே நம்முடைய வாழ்க்கையில் இருக்கும். ஆகச் சிறந்த விஷயங்கள் நம்முடைய வாழ்க்கயில் இருக்கும் பொழுது எதை இழந்தோம் என்ற சிந்தனை நம்முடைய மனதில் இருக்காது. அதை தான் வள்ளுவர் குறிப்பிடுகிறார். “ஆக்கம்… யார்.”

நன்றிகள்!

காத்திருந்து நீ விரும்பியதை அடை! Click here

காமம். தெரியாததும். தெரிந்துக்கொள்ள வேண்டியதும்! Click here

beelive123

Chiselers Academy, One of the Best institute for E-Learning.Its mainly for UPSC and TNPSC aspirants.We all have certain dream in our life.some have a dream to Become a Doctor,Engineer,Lawyer,Teacher and etc.If you have a Dream to become and administrator like IAS.,IPS.,IRS.,we are here to show you the way to Know about it and achieve it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *