கோழையாக இருக்காதே!

கோழையாக இருக்காதே!

குறளின் குரல்! – திருக்குறள்

பதிவு: 182 அதிகாரம்: வலியறிதல் குறள் எண்: 473

கோழையாக இருக்காதே!

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தவர் பலர்.

விளக்கம்:

தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தினால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.

Person in Black Crew Neck T-shirt Holding Soccer Ball
கோழையாக இருக்காதே!

வலியறிதல் என்ற தலைப்பிற்கு கீழ் வரக் கூடிய அழகான, அற்புதமான ஒரு திருக்குறள். வாழ்க்கையை மேம்படுத்தக் கூடிய நிறைய விஷயங்களை நம்முடைய திருக்குறளிலிருந்து பார்த்துக் கொண்டு வருகிறோம். இது நம்முடைய 182வது பதிவு. தன்னுடைய வலிமையை அறியாததால் தான் ஒருவன் தன்னுடைய முயற்சியிலிருந்து விளகுகிறான் என்று நம்முடைய ஐயன் குறிப்பிடுகிறார். வலிமை சமந்தமான ஆழமான மறைபொருள் இந்த குறளில் இருக்கிறதால் பல பதிவுகளில் இந்தக் குறளை பார்த்துக் கொண்டு வருகிறோம்.

தெரிந்துக் கொள்!

நம் வாழ்க்கையில் வலிமை என்ற ஒரு விஷயம் ரொம்பவே முக்கியமானது. வலிமையை சார்ந்து தான் நம்முடைய வாழ்வு அமையும். வலிமையின் ஆதாரம் என்று ஒரு சில விஷயங்கள் இருக்கிறது. முதல் இரண்டு விஷயங்களை நம்முடைய முந்தன பதிவில் பார்த்திருந்தோம். இந்த பதிவில் வலிமையின் மூன்றாவது ஆதாரத்தை பற்றி நாம் சில விஷயங்களை தெரிந்துக் கொள்ளலாம்.

நம்மை சுற்றி நடக்கக் கூடிய நிகழ்வுகள், வாய்ப்புகள், பிரச்சனைகள், சூழ்நிலை மற்றும் மனிதர்கள் இது எல்லாவற்றையும் நாம் ஆராய்ந்து அறிய வேண்டும். இது தான் வலிமையின் மூன்றாவது ஆதாரம். இந்த ஐந்து விஷயங்களை நாம் எந்த அளவிற்கு ஆராயுகின்றோமோ அந்த அளவிற்கு தான் நம்முடைய வலிமை அமையும்.

வாழ்வியல் சிந்தனை

நம்முடைய வாழ்க்கை ரொம்பவே குறுகியது. கடும் தவம் இருந்து ஆயிரம் வருடம் வாழ்வதற்கு இங்கு யாருக்கும் விருப்பமும் இல்லை நிகழ் காலத்தில் அது சாத்தியமும் இல்லை. வாழ போகின்ற குறுகிய வாழ்க்கையில் நாம் நினைத்த ஒரு வாழ்வை எப்படி நாம் அடைய போகின்றோம், அடைந்த வாழ்வை எப்படி தக்க வைக்க போகின்றோம், தக்க வைத்த வாழ்வின் வழியாக எப்படி அடுத்தவர்களுடைய வாழ்க்கையில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த போகின்றோம். இது தான் நம் வாழ்வியல் சிந்தனையாக இருக்க வேண்டும். சரியான ஒரு வலிமை இருந்தால் மட்டும் தான் அது சாத்தியம் ஆகும். அதற்காக தான் இந்த ஐந்து விஷயங்களை நாம் குறிப்பிட்டிருக்கிறோம். நிகழ்வுகள், வாய்ப்புகள், பிரச்சனைகள், சூழ்நிலை மற்றும் மனிதர்கள்.

இந்த ஐந்து விஷயங்களை நாம் எப்படி கையாளுகிறோம் எப்படி அனுகுகிறோம் என்பதை சார்ந்து தான் நம் வாழ்வின் வலிமை அமையும். நம்மை சுற்றி நடக்கக் கூடிய எல்லா நிகழ்வுகளுக்கும் நாம் எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று அவசியம் இல்லை. வேண்டாம் என்று சொல்ல வேண்டிய இடத்தில் வேண்டும் என்று சொல்வதும், வேண்டும் என்று சொல்ல வேண்டிய இடத்தில் வேண்டாம் என்று சொல்வதும் மிகப் பெரிய விளைவுகளை நம் வாழ்கையில் ஏற்படுத்தும். இரண்டாவது, வாய்ப்புகள். நமக்கு ஏற்படக் கூடிய வாய்ப்புகளை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். இல்லாத வாய்ப்புகளுக்காக ஏங்குபவர்களை விட இழந்த வாய்ப்புகளுக்காக ஏங்குபவர்கள் தான் அதிகம்.

மூன்றாவது விஷயம், பிரச்சனை. பிரச்சனைகளை பற்றி சரியான கண்ணோட்டம், மனப்பான்மை ரொம்பவே முக்கியம். சில நேரத்தில் பிரச்சனை, பிரச்சனை இல்லை. பிரச்சனையை நாம் எப்படி பார்க்கின்றோம் என்பது தான் பிரச்சனை. நான்காவது, சூழ்நிலை. சூழலின் நிலை அறிந்து, எந்த சூழலுக்கு எப்படி நாம் நடந்துக்கொள்ள வேண்டுமோ அந்த விதமாக நாம் நடந்துக்கொள்ள வேண்டும். காற்றடிக்கும் பொழுது மாவு விற்பதும், மழை பொழியும் பொழுது உப்பு விற்பதும், என்றைக்கும் உதவாது. ஐந்தாவது விஷயம், மனிதர்கள். மனிதர்களை நம்பவும் கூடாது, சந்தேகிக்கவும் கூடாது. ஏனென்றால், எல்லாம் அவர்கள் மூலமாக நடக்கும், அவர்களால் நடக்காது.

ஒவ்வொருத்தருடைய பழக்கத்திற்கும், குணத்திற்கும் அவர்கள் செய்யும் செயலிற்கும் ஏதோ ஒரு மறைமுகமான காரணம் நிச்சயம் இருக்கும். அது எப்பொழுது, எப்படி மாறும் என்பதை சர்வ நிச்சயமாக யாராலும் கனிக்க முடியாது. இந்த சத்தியங்களை நம்முடைய மனதில் நிருத்தி வாழ்ந்தோம் என்றால் எந்த இலக்கில் இருந்தும் நாம் பின்வாங்க மாட்டோம். வள்ளுவருடைய இந்த குறள் நமக்கான வெளிச்சமாக நம் வாழ்க்கையில் என்றென்றைக்கும் இருக்கும். “உடைத்தம்… பலர்.”

நன்றிகள்!

மகிழ்சியாக வாழ்! Click here

இது உன் வாழ்க்கை நீயே முடிவெடு! Click here

beelive123

Chiselers Academy, One of the Best institute for E-Learning.Its mainly for UPSC and TNPSC aspirants.We all have certain dream in our life.some have a dream to Become a Doctor,Engineer,Lawyer,Teacher and etc.If you have a Dream to become and administrator like IAS.,IPS.,IRS.,we are here to show you the way to Know about it and achieve it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *