காத்திருந்து நீ விரும்பியதை அடை!

காத்திருந்து நீ விரும்பியதை அடை!

குறளின் குரல்! – திருக்குறள்

பதிவு: 147 அதிகாரம்: காலம் அறிதல் குறள் எண்: 487

காத்திருந்து நீ விரும்பியதை அடை!

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

விளக்கம்:
தெளிந்த அறிவுடைய அரசன், தம் பகைவர் பகைமையை காட்டிய உடனே, அவர் அறியுமாறு வெளிப்படையாக சினம் கொள்ளமாட்டார். அவரை வெல்வதற்கு ஏற்ற காலம்வரும்வரை, மறைவாக உள்ளே புழுங்கி காத்திருப்பர்.

காலம் அறிதல் என்ற தலைப்பிற்கு கீழ் நம்முடைய திருவள்ளுவர் கொடுத்திருக்கக் கூடிய ஒவ்வொரு திருக்குறளுமே நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்தும். நமக்கான பக்குவத்தை உருவாக்கும். இந்த உலகத்தில் எல்லோருக்குமே சமமான, பொதுவான ஒரு விஷயம் யாருக்காகவும், எதற்காகவும் காத்திருக்காத ஒரு விஷயம், எல்லோரையும் காத்திருக்க செய்யும் ஒரு விஷயம் என்றால் அது நேரம் மட்டும் தான்.

Man Wearing Black and White Stripe Shirt Looking at White Printer Papers on the Wall
காத்திருந்து நீ விரும்பியதை அடை!

நிதானமாக செயல்படு!

நம்முடைய கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் இது எல்லாவற்றிற்குமே ஒரு தொடர்பு இருக்கும். நேரம் காட்டும் கடிகாரம், நம்முடைய வாழ்வையும் காட்டும். பழங்காலத்தில் சூரியன் உதிப்பதையும், மறைவதையும் வைத்து தான் நேரத்தை கணக்கெடுத்தார்கள். அது ஒரு நாளை இரண்டாக பிரித்தது. நேரம், நிமிடம், நொடி கணக்கெல்லாம் அப்பொழுது கிடையாது. பகல், இரவு மட்டும் தான். அந்த காலத்தில் ஆரோக்கியமும், ஆனந்தமும் மனிதனுக்கு நிறைவாக இருந்தது.

நிதானமாக மனிதன் செயல் பட்டதால் தன்னை சுற்றி என்ன நடக்கிறது, எது எதுவெல்லாம் இருக்கு என்று மனிதன் சிந்திக்க நேரம் எடுத்துக் கொண்டான். சக மனிதனையும், வேற்று உயிரையும் அன்பு செலுத்தி வாழ்ந்து வந்தான். விவசாயமே செய்யாமல் விளைச்சல் மட்டும் அதிகமாக இருந்தது. அந்த காலத்தில் தான் சித்தரும், புத்தனும் தோன்றினார்கள். காற்று, நிலம், நீர் எல்லாமே உயிரோட்டத்தோடு இருந்தது. கால மாற்றத்தில் காலமும் மாறுகிறது. சூரிய கடிகாரம், மண் கடிகாரம், நீர் கடிகாரம், இயந்திர கடிகாரம் பகல், இரவு இருந்தது நேரமாகவும், நேரமாக இருந்தது நிமிடமாகவும், நிமிடமாக இருந்தது இன்றைக்கு நொடியாகவும் மாறியிருக்கிறது. மிக வேகமான, பரப்பரபான வாழ்க்கை சூழலில் இன்றைக்கு நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம்.

நன்றாக சிந்தித்து பார்த்தோம் என்றால் கால கடிகாரத்துடைய பரிணாம வளர்ச்சியும், மனித வாழ்க்கையுடைய வீழ்ச்சியும் சமமாக இருக்கிறதை நாம் உணரலாம். எதுவுமே இல்லாத காலத்தில் நிறைவாகவும், நிம்மதியாகவும், நீண்ட ஆயுளோடும் வாழ்ந்த மனித சமூகம் இன்றைக்கு தொழில் துறையில் பெரிய அளவிற்கு வளந்தும் நம்மால் வாழ முடியவில்லை. நாம் யாருமே ஆயிரம் வருடங்கள் இந்த பூமியில் வாழ போவது கிடையாது. எல்லா விதமான அனுபவங்களையும் அடைவதற்கு தான் நாம் இந்த பூமியில் பிறந்திருக்கின்றோம்.

நாம் வாழும் இந்த வாழ்க்கையில் நிதானமாக செயல் பட்டால் மட்டும் தான் நாம் நினைக்கின்ற சில விஷயங்களை நம்முடைய வாழ்க்கையில் நாம் அடைய முடியும் என்பதை தான் நம்முடைய திருவள்ளுவர் இந்த குறள் மூலியமாக நமக்கு சொல்ல வருகிறார். ஆசை பட்டது ஒடனே கிடைத்து விட்டது என்றால் அதனுடைய அருமை நமக்கு தெரியாது. காதலாக இருக்கட்டும், இலட்சியமாக இருக்கட்டும், எதிர் கால கணவாக இருக்கட்டும் அதை நாம் அடைய வேண்டும் என்றால் ஒரு சில செயலில் நாம் ஈடுபட்டு நம்மையே நாம் உருவாக்க வேண்டும்.

கால கடிகாரம் வேகமாக ஓடுகிறது என்பதனால் நாமும் வேகமாக ஓட முடியாது. வாழ்க்கையில் நாம் நினைத்த சில விஷயங்களை உடனே அடைய முடியாது, அடையவும் கூடாது. நம்முடைய நிதானமும், காத்திருப்பும் நமக்கு நிறைய பக்குவத்தை ஏற்படுத்தும். கண்ணை விட்டு சித்திரம் வாங்குவது எந்த அளவிற்கு முட்டாள் தனமோ அதே போல் தான் எதிர் கால இலட்சியத்தை நினைத்து நிகழ்காலத்தை நாம் தேவையற்ற இயக்கங்களுக்காக வீணடிக்கக் கூடாது.

தகுதிகளை வளர்த்துக்கொள்!

நாம் ஆசைபட்ட சில விஷயங்கள் கிடைக்காமல் போவதற்கும், கிடைத்ததற்கு பிறகு நாம் அதை இழப்பதற்குமான மிக முக்கியமான காரணம் நாம் ஆசை பட்ட விஷயத்தை அடைவதற்கும், அதனை தக்க வைப்பதற்கு தேவையான தகுதிகளை நாம் வளர்த்துக் கொள்ளாமல் போவது தான். வேகமாக ஒரு விஷயத்தை அடைய வேண்டும் எனும் பொழுது நிச்சயம் சில தடுமாற்றங்கள் நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும். நம்முடைய மனஅமைதியை அடகு வைத்து நாம் எதை அடைந்தாலும் அந்த வாழ்க்கை வீணானது தான்.

ஒரு நிலத்தில் முல் வளருகின்ற காலமும், மூங்கில் வளருகின்ற காலமும் ஒன்று இல்லை. இமைகள் துடிக்கின்ற துடிப்பும், இதயம் துடிக்கின்ற துடிப்பும் ஒரே விதமான விளைவுகளை ஏற்படுத்தப் போவதும் இல்லை. எந்தெந்த செயலுக்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று இருக்கிறதோ, அவ்வளவு காலம் நிச்சயம் எடுக்கும். அது வரைக்கும் நாம் காத்திருக்க பழக வேண்டும். நாம் அவசர படுகின்றோம் என்பதற்காக ஒரு சில விஷயங்கள் உடனே மாறாது. கால மாற்றம் காலத்தையும் மாற்றும், நம்முடைய வாழ்வையும் மாற்றும்.

நமக்கான நேரம் வரும்வரை நாம் காத்திருக்க வேண்டும். எதையும் செய்யாமல் இல்லை எல்லாவற்றையும் அதாவது நாம் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டு நாம் காத்திருக்க வேண்டும். அந்த விதமான காத்திருப்பு அர்த்தமானது, அற்புதமானது. இதை தான் நம்முடைய வள்ளுவர் இந்த குறள் வழியாக நமக்கு சொல்லியிருக்கிறார். “பொள்ளென… யவர்” என்று. நாம் ஆசை பட்டது நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் அதற்கான தகுதிகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த இடத்தில் காத்திருப்பு என்பது வெறும் சும்மா இருப்பது கிடையாது, நாம் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்து முடித்து காத்துருப்பது. அந்த தகுதிகளை வளர்த்துக் கொள்ளும் காலம் தான் காத்திருப்பு காலம்.

நன்றிகள்!

அவசரப்படாதே! Click here

உன் பலத்தை அதிகரி! Click here

beelive123

Chiselers Academy, One of the Best institute for E-Learning.Its mainly for UPSC and TNPSC aspirants.We all have certain dream in our life.some have a dream to Become a Doctor,Engineer,Lawyer,Teacher and etc.If you have a Dream to become and administrator like IAS.,IPS.,IRS.,we are here to show you the way to Know about it and achieve it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *