காமம். தெரியாததும். தெரிந்துக்கொள்ள வேண்டியதும்!

காமம். தெரியாததும். தெரிந்துக்கொள்ள வேண்டியதும்!

குறளின் குரல்! – திருக்குறள்

பதிவு: 132 அதிகாரம்: நினைந்தவர் புலம்பல் குறள் எண்: 1201

காமம். தெரியாததும். தெரிந்துக்கொள்ள வேண்டியதும்!

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.

விளக்கம்:
நினைத்தாலும் நீங்காத மகிழ்ச்சி தருதலால் கள்ளைக் காட்டிலும் காமம் இன்பமானது.

நம்முடைய திருக்குறளை மனித வாழ்க்கையின் இரகசியமும், மேன்மைகளையும் அடங்கிய பொக்கிஷம் என்று சொல்லலாம். அதனால் தான் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை மேம்படுத்தக் கூடிய சில விஷயங்களை நாம் திருக்குறளிலிருந்து பார்த்துக் கொண்டு வருகிறோம். இது நம்முடைய 132வது பதிவு. இன்றைக்கு காதல் மற்றும் காமத்தை பற்றிய சில அடிப்படை புரிதல்களை நாம் பார்க்கலாம்.

Portrait of Happy Young Woman Using Mobile Phone in City
காமம். தெரியாததும். தெரிந்துக்கொள்ள வேண்டியதும்!

காதல் மற்றும் காமத்தை பற்றிய புரிதல்!

காதல் மற்றும் காமம் நிகழ் காலத்து சமூகம் புரிந்துக் கொள்ள வேண்டிய இரண்டு வார்த்தைகள். இந்த உலகம் தோன்றிய நாளிலிருந்து இன்றைக்கு வரைக்கும் எண்ணற்ற விஷயங்கள் மாறியிருக்கிறது. பரிணாம வளர்ச்சி நிறைய மாற்றங்களை நம்முடைய உலகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த உலகம் தோன்றும் பொழுது இருந்த நிறைய விஷயங்கள் இன்றைக்கு இல்லாமலும் போயிருக்கிறது. ஆனால், காதல் மற்றும் காமம் என்ற இரண்டு விஷயங்கள் இன்றளவும் மனித சமுதாயத்திற்கு மட்டும் இல்லை எல்லா விதமான உயிரிணத்திற்கும் இருந்துக் கொண்டு தான் இருக்கிறது.

வாழ்வியலை போதித்த நம்முடைய வள்ளுவர் இன்பத்துப் பால் என்ற தனி பிரிவில் 25 அதிகாரங்கள் அதாவது 250 பாடல்களை காதல் மற்றும் காமம் சமந்தமான சில அடிப்படை புரிதல்களை நமக்கு கொடுத்திருக்கிறார். எந்த ஒரு விஷயத்தையும் மற்றவர்களுக்கு நாம் புரிய வைக்க வேண்டும் என்றால் அதற்கு நாம் பல விதமான உதாரணங்களையும், எடுத்துக் காட்டுகளையும், மேற்கோள்களையும் பயன் படுத்துவோம். பத்து விதமான எடுத்துக் காட்டுகள் சொல்லியும் ஒரு விஷயத்தை புரிய வைக்கலாம். ஒரே விதமான எடுத்துக் காட்டுகளை சொல்லியும் ஒரு விஷயத்தை புரிய வைக்கலாம்.

இந்த அடிப்படையில் தான் நம்முடைய வள்ளுவர் ஆண், பெண்ணை மட்டுமே வைத்து காதல் மற்றும் காமத்தை பற்றிய புரிதல்களை ஏற்படுத்துவதற்கு முயற்சி எடுத்திருக்கிறார். ஆண், பெண்ணை மட்டுமே வைத்து காதல் மற்றும் காமத்தை புரிய வைத்ததால் அது எதோ ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் இருக்கும் காரியம் என்று சொல்லி நாம் தவறாக புரிந்துக் கொள்ளக் கூடாது.

காதல் மற்றும் காமத்தை ஒற்றை வரியில் சொல்ல வேண்டும் என்றால் நம்முடைய ஆழமான விருப்பம் மற்றும் முழுமையான ஈடுபாடு என்று சொல்லலாம். ஏதோ ஒன்றின் மீது யாரோ ஒருவரின் மீது கொண்ட ஆழமான விருப்பம் தான் காதல். அந்த காதல் கொண்ட ஒன்றின் மேல், ஒருவர் மேல் வரும் முழுமையான ஈடுபாடு தான் காமம். இரண்டுமே ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது தான்.காமம் என்பது புணர்தல் இல்லை புரிதல்.

இயற்கையில் அமைந்த உணர்வு!

ஒரு ஓவியன் தான் வரையும் ஓவியம் மீதும், ஒரு கவிஞன் தன் கவிதையின் மீதும், ஒரு எழுத்தாளர் தன் எழுத்தின் மீதும், ஒரு இலட்சியவாதி தன் இலட்சியத்தின் மீதும் கொண்ட அளவிட முடியாத காதலே காமம்.காதலும், காமமும் மனிதனுக்கு மட்டுமே உரியது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படி இல்லை. ஒளிரும் சூரியன், சுழழும் பூமி, புல்லை தாங்கும் நிலம், மழைக் கொண்ட மேகம், வீசும் காற்று, மேல் நோக்கி எறியும் தீச்சுடர், கடல் வாழ் இனங்கள், ஊறும் எறும்பு, பறக்கும் பறவைகள், கொட்டும் தேள், மானை கொல்லும் காட்டுச் சிங்கம், தெருவில் திரியும் நாய், தித்திக்கும் தேன், கசக்கும் பாகர்க்காய் இது எல்லாமே காதல் கொண்ட காமத்தின் படைப்பு தான்.

காதலும், காமமும் இயற்கையில் அமைந்த அற்புதமான ஒரு உணர்வு. இந்த பூமியில் வாழக் கூடிய எல்லா உயிரிணத்திற்கும் இந்த உணர்வை பற்றிய புரிதல் இயல்பாகவே இருக்கும். காதலும், காமமும் உடல் சமந்தப்பட்டதா இல்லை மனம் சமந்தப்பட்டதா என்ற கேள்வி கேட்கும் பொழுது, இரண்டுமே இல்லை அது உள்ளமும், உணர்வும் சமந்தப்பட்டது. இவைகளை புரிந்துக் கொண்ட உயிர்களால் மட்டுமே வாழ்க்கையில் தெய்வீக ஒழுக்கத்தை கடைப்பிடிக்க முடியும்.

நிர்வானமாக இருந்தாலும் மலைவாழ் மக்களிடையிலும், மற்ற உயிரிணங்களிடையிலும் வன்புணர்வு குற்றங்கள் நடப்பது கிடையாது. நம்முடைய வாழ்க்கையில் எப்பொழுது ஒரு விஷயத்தை பற்றி சரியாக புரிந்துக் கொள்ளாமல் இருக்கின்றோமோ அப்பொழுதெல்லாம் அந்த விஷயத்தால் நமக்கு சீர்கேடுகள் ஏற்படும். எங்கெல்லாம் காதலும், காமமும் அறங்கேறுகின்றதோ, அங்கெல்லாம் ஏதோ ஒன்று பிறப்பெடுக்கும்.

கண் இமைகளுக்கு இடையே நடக்கும் காதல் மற்றும் காமம் தான் உறக்கம். கண்களுக்கும் காட்சிகளுக்கும் இடையே ஏற்படும் காதல் மற்றும் காமம் தான் கற்பனைகள். எழுது கோளுக்கும் வெற்று தாளிற்கும் இடையே இருக்கக் கூடிய காதல் மற்றும் காமத்தின் பிறப்பு தான் எழுத்துக்கள். விதைக்கும், மண்ணிற்கும் இடையே நடக்கக் கூடிய புணர்தலுடைய விளைவு தான் மரம், செடி, கொடிகள். இப்படி எண்ணற்ற விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

காதல் மற்றும் காமத்திலிருக்கக் கூடிய சரியான புரிதல் தான் நம்முடைய சமூகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லும். தொடர்ந்து அடுத்தடுத்த பதிவில் நாம் நிறைய விஷயங்களை பார்க்கலாம். ஏனென்றால், காமம் இனிது என்று வள்ளுவர் குறிப்பிட்டிருக்கிறார்.நம்முடைய அகராதியில் இனிது என்றால் இன்பம் தரக் கூடியது, நன்மையானது என்று அர்த்தம் இருக்கிறது. “உள்ளினும்… இனிது.”

நன்றிகள்!

உன் பலத்தை அதிகரி! Click here

சொல்ல வேண்டியதை சொல்! Click here

beelive123

Chiselers Academy, One of the Best institute for E-Learning.Its mainly for UPSC and TNPSC aspirants.We all have certain dream in our life.some have a dream to Become a Doctor,Engineer,Lawyer,Teacher and etc.If you have a Dream to become and administrator like IAS.,IPS.,IRS.,we are here to show you the way to Know about it and achieve it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *