அவசரப்படாதே!

அவசரப்படாதே!

குறளின் குரல்! – திருக்குறள்

பதிவு: 190 அதிகாரம்: காலமறிதல் குறள் எண்: 487

அவசரப்படாதே!

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

விளக்கம்:
அறிவுடையார் வெளிப்பட கொதிப்படையார் காலம்பார்த்து உட்கொதிப்பு அடைவர்.

வாழ்க்கையை மேம்படுத்தக் கூடிய நிறைய விஷயங்கள் நம்முடைய திருக்குறளில் இருக்கிறது. அதற்காக தான் தினம் ஒரு குறள் வீதம் 189 பதிவுகள் பார்த்திருக்கின்றோம். இது நம்முடைய 190வது பதிவு. இந்த ஒரு குறள் காலமறிதல் என்ற தலைப்பிற்கு கீழ் வரக்கூடிய அழகான, ஆழமான சத்தியம் இருக்கக் கூடிய ஒரு குறள்.

Woman Sitting on Metal Gate Pass Beside Mud Road
அவசரப்படாதே!

காத்திரு!

நாம் யார் என்று அடுத்தவர்களுக்கு சரியான நேரம் காலத்தில் தான் வெளிப்படுத்த வேண்டும். அவசரப்படக் கூடாது என்பது தான் இந்தக் குறளின் சாரம்.நிறைய நேரங்களில் நாம் அடைய வேண்டும் என்று நினைக்கின்ற சில விஷயங்கள் நம்முடைய வாழ்க்கையில் அடைய முடியாமல் போவதற்கு மிக முக்கியமான காரணம் நாம் தான். செய்ய வேண்டிய நேரத்தில், செய்ய வேண்டிய விஷயத்தை நாம் செய்யாமல் தள்ளிப் போடும் பொழுதோ, இல்லை சரியான சூழலில் சிலவற்றை வெளிப்படுத்த தவறும் பொழுதோ, தவறான சூழலில் வெளிப்படுத்தும் பொழுதோ, இந்த விதமான சில செயல் பாடுகளை தான் நம்முடைய முயற்சிகள் நீர்த்துப் போகிறது.

நம்மை சுற்றி நடக்கக் கூடிய நிகழ்வுகள் ஒவ்வொன்றும் நாம் உடனே எதிர்வினை ஆற்றுவது என்பது தான் நிறைய எதிர்மறையான விளைவுகளை ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணம். நம்முடைய வாழ்க்கையில் ஒரு சில விஷயங்களை அடைய வேண்டும் என்றால் அதற்கு ஒரு சில இடங்களில் நாம் பேசாமல் இருக்க வேண்டும். ஒரு சில விஷயங்களை நாம் பார்க்காமல் இருக்க வேண்டும். ஒரு சில விஷயங்களை நாம் கேட்காமல் இருக்க வேண்டும்.

நம்முடைய கண், காது, வாய் வழியாக நமக்குள்ளே போகக் கூடிய ஒவ்வொன்றுமே நம்முடைய ஆள்மனதில் ஒரு விதமான மாற்றங்களை ஏற்படுத்தும். பெரும்பாலான நேரத்தில் நாம் நமக்கானதை பார்க்காமல், நமக்கானதை கேட்காமல், நமக்கானதை பேசாமல் தேவையற்ற, வீணான நிறைய காரியங்களில் ஈடு படுவதால் தான் நமக்கான நேரம் வாழ்க்கையில் வீணாகிறது.

நம்பிக்கையோடு இரு!

நம்முடைய ஐம்புலன் வழியாக நம்முடைய மனதிற்கான தகல்வள்கள் கடத்தப் படும். அதில் ரொம்பவே முக்கியமானது கண் வழியாக பார்ப்பது, காது வழியாக நாம் கேட்பது மற்றும் வாய் வழியாக பேசுவது. இது எல்லாமே நம்முடைய ஆள்மனதில் ஒரு சில பதிவுகளை ஏற்படுத்தும், அந்த பதிவின் அடிப்படையில் தான் நம்முடைய வாழ்க்கை அமையும். இது எல்லாமே நம்முடைய நம்பிக்கையின் அளவில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது.

ஒரு குறிபிட்ட விஷயத்தை நாம் அடைவதற்கும், அடையமுடியாமல் போவதற்கும் காரணம் நம்முடைய நம்பிக்கையின் அளவு மாறுபடுவது தான். சரியான நம்பிக்கை நம்முடைய மனதில் இல்லாத பட்சத்தில் நம் வாழ்க்கையில் நடக்கக் கூடிய சூழலிற்கு உடனடி தீர்வை நாம் தேடுவோம். நம்முடைய பலம் என்ன, பலவீணம் என்ன என்று ஒரு சில சூழலில் நாம் வெளிப்படுத்தும் பொழுது நம்மை சார்ந்தவர்கள் நாம் யார், நம்முடைய நிலை என்ன என்று புரிந்துக் கொள்வார்கள்.

இருக்கக் கூடாத சூழல் இருக்கும் பொழுதோ, பழகக் கூடாத மனிதர்களோடு பழகும் பொழுதோ, செய்யக் கூடாத விஷயங்கள் செய்யும் பொழுதோ நம்முடைய வாழ்க்கை ஓட்டம் மாறுபடும். வாழ்க்கையில் எது நடந்தாலும் நம்முடைய நிலையை நாம் இழக்காமல் வாழ வேண்டும். ஒரு குறிபிட்ட கால நேரத்திற்கு நாம் யார், என்ன, எதற்கு நாம் கோவப்படுவோம், எதற்கு நாம் சந்தோசப் படுவோம், எது நம்முடைய பலம், எது நம்முடைய பலவீணம் என்பதை நாம் வெளிபடுத்தக் கூடாது.

சதுரங்க ஆட்டத்தில் சாதாரன சிப்பாயும் இராணியாக மாறும். அதற்கு அது ஒரு குறிபிட்ட நேரம் காலம் காத்திருக்க வேண்டும், கடக்க வேண்டும், அதை பாதுகாக்க வேண்டும். இந்த மூன்றையும் கடந்த சிப்பாய் நிச்சயம் இறுதிகட்டத்தை நெருங்கும் பொழுது அது இராணியாகவோ இல்லை வேறு ஒரு அதிகாரம் நிறைந்ததாகவோ மாறும். நம்முடைய வாழ்க்கையை இந்த தகவளோடு ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இன்னும் நிறைய விஷயங்கள் நமக்கு புரிய ஆரம்பிக்கும்.

சரியான நேரம் காலத்திற்காக காத்திருந்து ஒரு சில விஷயத்தை நாம் அடையும் பொழுது தான் நாம் அடையக் கூடிய விஷயங்களிலிருக்கும் சந்தோஷம் முழுமையாக நமக்கு கிடைக்கும். தன்னுடைய வாழ்க்கையில் பெரிய இலட்சியத்தை கொண்டவர்கள் மிக பெரிய விஷயத்தை அடைய வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் சாதாரன நிலையில் இருக்கக் கூடிய மற்ற மனிதர்களை மாதிரி நடந்துக் கொள்ள கூடாது என்று தான் வள்ளுவர் இந்த விதமான அறிவுறையை அறிவுறுத்துகிறார். “பொள்ளென… யவர்.”

நன்றிகள்!

இது உன் வாழ்க்கை நீயே முடிவெடு! Click here

நோயின் மிக முக்கியமான காரணம்! Click here

beelive123

Chiselers Academy, One of the Best institute for E-Learning.Its mainly for UPSC and TNPSC aspirants.We all have certain dream in our life.some have a dream to Become a Doctor,Engineer,Lawyer,Teacher and etc.If you have a Dream to become and administrator like IAS.,IPS.,IRS.,we are here to show you the way to Know about it and achieve it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *