Daily Current Affairs Quiz

Daily current affairs Quiz for UPSC and TNPC in Bilingual

Daily Current Affairs

சிற்பிகள் பயிற்சி மையம்

Weekly  Current Affairs (03 Oct to 09 Oct)-Week 18

போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் நடப்பு நிகழ்வுகளை தினமும் செய்த்தாள் மற்றும் மற்ற தொகுப்புகளில் இருந்து தகவல்களை பெற வேண்டும். இதன் மூலம் அவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற வழி வகுக்கும்..

எங்கள் மயிற்சி மையத்தில் ஒவ்வொரு வாரமும் மாணவர்களுக்கு நடப்பு நிகழ்வுகளை PDF வடிவில் அளித்து வருகிறோம்.

நீங்கள் படித்து பயன்பெறுங்கள்.

எங்கள் பயிற்சி வகுப்புகளில் இணைய 9551836052 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

Download PDF File here

Daily Current Affairs in tamil: Previous Week: Click here

Our Online classes: click Here

நடந்ததை நினைத்து வாழ்வை வீணடிக்காதே!

குறளின் குரல்! – திருக்குறள்

பதிவு:171 அதிகாரம்: வெகுளாமை குறள் எண்:303

நடந்ததை நினைத்து வாழ்வை வீணடிக்காதே!

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.

விளக்கம்:
எத்தகையோரிடத்திலும் சினங்கொள்ளாமல் அதை மறந்துவிட வேண்டும். சினத்தால் தீய விளைவுகள்தான் வரும்.

Young Asian woman on station at night
நடந்ததை நினைத்து வாழ்வை வீணடிக்காதே!

வெகுளாமை என்ற தலைப்பிற்கு கீழ் வரக் கூடிய அழகான, அற்புதமான ஒரு திருக்குறள். வெகுளாமை என்றால் கோபம் கொள்ளாமை. நம்முடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான சில நிகழ்வுகளை நாம் மறக்காமல் இருப்பதனால் ஒரு வித கோப உணர்வு நம் மனதில் எப்பொழுதும் இருக்கும். அது மற்றவர்களை அழிக்கிறதை விட நம்மை தான் அதிகமாக அழிக்கும். அந்த விதமான உணர்வுகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

நம்முடைய வாழ்க்கையில் நாம் கேட்கும் சில கேள்விகளுக்கு நமக்கு பதில் கிடைக்காது. கடவுள் இருக்காறா? இல்லையா? பிறப்பிற்கு பிறகு நாம் பிறப்போமா? பிறக்க மாட்டோமா? கோழியிலிருந்து முட்டை வந்ததா? இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா? இப்படி எண்ணற்ற கேள்விகளுக்கு நமக்கு பதில் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் அந்த பதில் தீர்க்கமானதாகவோ, உறுதியானதாகவோ இருக்காது. இது எல்லா வற்றிலும் முக்கியமான கேள்வி நமக்கு நடந்த ஏதோ ஒரு நிகழ்வைக் குறித்து நமக்கு நாமே கேட்டுக் கொள்ளும் கேள்வி.

எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடந்தது? இப்படி எல்லாம் நடக்கிறது? இந்த இரண்டு கேள்வியை நாம் நம்முடைய வாழ்க்கையில் கேட்டோம் என்றால் நாம் வாழும் வாழ்க்கையில் நமக்கு நிம்மதி இருக்காது. நிகழ்வுகள் ஒவ்வொன்றும் காலத்தின் கட்டாயம். நடந்த நிகழ்வை மாற்றக் கூடிய மாய மந்திர வித்தை எதார்த்த வாக்கைக்கு பொருந்தாது. நம்முடைய வாழ்க்கையில் ஒரு சில விஷயங்கள் நமக்கு பிடித்த மாதிரி நடக்காமல் போகலாம்.

Man Sitting on the Mountain Edge
நடந்ததை நினைத்து வாழ்வை வீணடிக்காதே!

ஒரு சில மனிதர்கள் நாம் எதிர்பார்த்த மாதிரி இருக்காமல் போகலாம். எதிர்பார்த்த ஏக்கம், கனவு, ஆசை நடக்காமலும் போகலாம். இது எதற்கும் நாம் மனம் தளரக் கூடாது. சக நிகழ்வுகளின் கோர்வை தான் சரித்திரம். நாடகத்தின் இறுதி காட்சி முடியும் முன்னே இடையில் நடக்கக் கூடிய காட்சியை நாம் இறுதி காட்சியாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

கடந்ததையும், நடந்ததையும் மறந்து விட்டு எதிர் வரும் காலத்தை ஏற்றுக்கொள்ளும் மனபலத்தை அடைவதற்கான முயற்சியை எடுக்க வேண்டுமே தவிற எப்பையோ நடந்ததையும், தேவையில்லாத மனிதர்கள் செய்ததையும் நினைத்து நாம் நம்முடைய வாழ்க்கையில் கோபமான மனநிலையிலிருந்து நம்முடைய வாழ்க்கையை வீணடிக்க கூடாது. நாம் வாழும் வாழ்க்கையில் மாற்ற வேண்டியதை மாற்ற வேண்டும், ஏற்றுக் கொள்ள வேண்டியதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதற்கு முரன்பட்டு சிந்தித்தோம் என்றால், நாம் எதிர்பார்க்கக் கூடிய வாழ்க்கை நமக்கு கிடைக்காது. அப்படி ஒரு வாழ்க்கை நமக்கு வேண்டும் என்றால் அதற்கு மறதி என்றது அற்புதமான ஒரு விஷயம். நம்முடைய முயற்சி வழியாக தான் நமக்கு நடந்த கசப்பான எண்ணங்களிலிருந்து நாம் வெளிவர வேண்டும். அதற்கு தான் நம் வள்ளுவர் இந்த அறிவுரையை நமக்கு கொடுத்திருக்கிறார். “மறத்தல்… வரும்.”

நன்றிகள்!

beelive123

Chiselers Academy, One of the Best institute for E-Learning.Its mainly for UPSC and TNPSC aspirants.We all have certain dream in our life.some have a dream to Become a Doctor,Engineer,Lawyer,Teacher and etc.If you have a Dream to become and administrator like IAS.,IPS.,IRS.,we are here to show you the way to Know about it and achieve it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *