மாற்றத்தை ஏற்றுக்கொள்!

மாற்றத்தை ஏற்றுக்கொள்!

குறளின் குரல்! – திருக்குறள்

பதிவு: 092 அதிகாரம்: ஒழுக்கமுடைமை குறள் எண்: 140

மாற்றத்தை ஏற்றுக்கொள்!

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

விளக்கம்:
உலகில் இருப்பவரோடு ஒட்டி வாழ்தலை கல்லாதவர், பல நூல்களை கற்றவராயினும் அறிவில்லாதவரே.

Woman Comforting Friend
மாற்றத்தை ஏற்றுக்கொள்!

நிறைய நேரங்களில் ஒத்த மனப்பான்மை இருக்கின்றவர்களுடன் தான் நாம் பழகுவதற்கு விருப்பம் கொள்வோம்.நண்பர்களாக இருக்கட்டும், வாழ்க்கை துணையாக இருக்கட்டும், பழக வேண்டும், வாழ வேண்டும் என்றால், நிறைய பொருத்தங்கள் இருக்கின்றதா என்று நாம் பார்ப்போம்.நம்மை பொருத்த வரை ஒரே மனநிலை, ஒரே விதமான விருப்பம் இருக்கின்றவர்களோடு வாழ்ந்தால் மட்டும் தான் சுகமாக இருப்போம் என்று நாம் நினைப்போம்.

இந்த உலகத்தில் நிறைய விஷயங்கள் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.பஞ்ச பூதங்களை எடுத்துக்கொண்டோம் என்றால், ஒன்று மற்றொன்றில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டது.ஆனால், இந்த உலகத்துடைய இயக்கம் சீராக சரியாக இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றது.

பஞ்ச பூதங்களுக்கு இடையில் ஒரே விதமான பண்பு நலன்கள் இல்லை என்றாலும், இந்த பூமியின் இயக்கம் சீராக இயங்கிக்கொண்டு இருக்கின்றது.வள்ளுவர் இங்கே குறிப்பிட்டிருக்கும் ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல்’ என்ற ஒற்றை வரி வாழ்வியலுடைய பரிணாமத்தை நமக்கு புரிய வைக்கும்.

எதுவும் நிலையானது இல்லை!

நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் அனைத்துமே மாறுபட்டது, மாற்றத்திற்கு உட்பட்டது.எதுவும் நிலையானது இல்லை என்று நமக்கு தெரியும்.நாம் வாழ்க்கையை பெரிய அளவிற்கு வாழ ஆசைப்படுகின்றோம் என்றால், மாறுபட்ட, வேறுபட்ட சூழல்களையும், மனிதர்களையும் நாம் சந்தித்தே ஆகவேண்டும்.ஆனால், சிறு வயதில் இருந்தே நமக்குள் ஒரு கெட்ட பழக்கம் நம்மோடு ஒட்டிக்கொண்டே இருக்கும்.புதுமைகளை, மாற்றங்களை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று நாம் அடம்பிடிப்போம்.

சிறு வயதில் இருந்து பார்த்தீர்கள் என்றால், நம் பள்ளி பருவத்தில் அதிக நண்பர்களோடு நாம் பழக மாட்டோம்.ஒரு சில நண்பர்கள் மட்டும் தான் நம்முடன் நெருக்கமாக பழக நாம் அனுமதிப்போம்.அதற்கு நாம் கூறும் காரணம், நம்மைப்போல ஒத்த மனப்பான்மை இருக்கின்றவர்களுடன் பழகினால் மட்டும் தான் நம் உறவு நிலைக்கும், நீடிக்கும் என்று நினைத்துக்கொண்டு நம்முடைய எண்ணங்களில் இருந்து வேறுப்பட்டவர்களை நாம் ஒதுக்கி வைப்போம்.அங்கிருந்து ஆரம்பமாகின்ற ஒரு விஷயம் பெரிய வயது வரை தொடரும்.வளர வளர மற்றவர்களிடம் பழகுவதற்கு கூச்சம், அச்சம் என்ற அனைத்துமே நம்மோடு சேர்ந்து வளரும்.

சிறு வயதில் இருந்தே ஒரே விதமான எண்ணம், சிந்தனை உள்ளவர்களோடு பழகுவதனால், வளர வளர மாற்றத்திற்கு உட்பட்டவர்கள், மாறுபட்டவர்களோடு பழகுவதற்கு நாம் கூச்சப் படுவோம், அச்சப்படுவோம்.நமக்கு ஒரு விஷயம் சரி என்றால் அது எல்லோருக்குமே சரி என்று சொல்ல முடியாது.நம் பார்வையில் ஒருவருக்கு தவறு என்றால், அது உலகத்திற்கே தவறு என்று சொல்ல முடியாது.மாறுபட்ட கண்ணோட்டம், மாறுபட்ட விருப்பம், மாறுபட்ட அனுபவம் கொண்டவர்கள் தான் நாம் ஒவ்வொருவரும்.

புரிந்துக் கொள்ள முயற்சி செய்!

என்னைப்போலவே யார் இருப்பார்கள் என்று பார்த்து பழகினோம் என்றால், ஒரு சில நபர் தான் நமக்கு நண்பர்களாக அமைவார்கள்.சில நேரங்களில் நம் மனதிற்கு பிடிக்கவில்லை என்றாலும் ஒரு சில நபருடன் சில வருடங்களை கழிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகும்.

அவை அலுவலகத்தில் பணிபுரிகின்றவர்களாக இருக்கலாம், இல்லையெனில் நம் குடும்பத்தில் இருக்கின்றவர்களாக இருக்கலாம் இல்லையெனில் சமூகத்தில், நாடுகளில் இதைப்போல் நிறைய விஷயங்களை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது, நம்மிலிருந்து மாறுபட்டவர்களை நாம் சந்திக்க வேண்டிய சூழ்நிலை, இல்லையெனில் பழக வேண்டிய சூழ்நிலை, வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும் பொழுது நாம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நம் வாழ்க்கையில் இருக்கின்ற சுவாரசியத்தை நாம் இழந்துவிடுவோம்.

நாம் நினைப்பது மட்டும் தான் நடக்க வேண்டும், அனைவரும் நம்மைப்போல் தான் இருக்க வேண்டும் என்று அடம்பிடிப்பது, ஒரு விதமான முட்டால் தனம் என்று கூறலாம்.அந்த விதமான மனநிலையில் நம்மால் ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ முடியாது.அதனால் தான் நம் வள்ளுவர் “உலகத்தோடு…. தார்” என்று குறிப்பிட்டிருக்கின்றார்.முன்னர் குறிப்பிட்டது போலவே பஞ்ச பூதங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்டிருந்தாலும் இந்த உலகத்தினுடைய இயக்கத்திற்கு அது தடையாக இல்லை.

நம்முடைய வாழ்க்கையிலும் மாறுபட்டவர்கள், முறன்பட்டவர்களை நாம் புரிந்துக்கொண்டோம் என்றால், நம் வாழ்க்கையும் சீராக மாற ஆரம்பமாகும்.ஏனென்றால், மாற்றங்களை ஏற்றுக்கொள்வதில் தான் உண்மையான சந்தோஷம் அடங்கியிருகின்றது.

நன்றிகள்!

சிறந்த அரசியல் தலைவன்? Click here

உன்னை தாழ்த்தாதே, உயர்த்து! Click here

beelive123

Chiselers Academy, One of the Best institute for E-Learning.Its mainly for UPSC and TNPSC aspirants.We all have certain dream in our life.some have a dream to Become a Doctor,Engineer,Lawyer,Teacher and etc.If you have a Dream to become and administrator like IAS.,IPS.,IRS.,we are here to show you the way to Know about it and achieve it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *