நோயின் மிக முக்கியமான காரணம்!

நோயின் மிக முக்கியமான காரணம்!

குறளின் குரல்! – திருக்குறள்

பதிவு:156 அதிகாரம்: மருந்து குறள் எண்:948

நோயின் மிக முக்கியமான காரணம்!

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

விளக்கம்:
நோய் இன்னதொன்று ஆராய்ந்து, நோயின் காரணம் அறிந்து, அதைத் தணிக்கும் வழியையும் தெளிந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்ய வேண்டும்.

வாழ்வியலை வகுத்துக் கொடுத்த ஐயன் திருவள்ளுவரின் திருக்குறளிலிருந்து ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு பதிவை பார்த்துக் கொண்டு வருகிறோம். அந்த அடிப்படையில் இன்றைக்கு அதிகம் அச்சுருத்தும் கொரோனா நோய் தொற்று மற்றும் இல்லாமல் எண்ணற்ற நோய்களையும், அதை சார்ந்த சில புரிதல்களையும் நாம் கற்றுணர்ந்து நம்மை சார்ந்தோர்க்கு தெரிய படுத்தலாம். ஏனென்றால், இன்றைய சூழலுக்கு தேவையான ஒரு விஷயம்.

Concept Of Covid-19 In Red Background
நோயின் மிக முக்கியமான காரணம்!

மருந்து என்ற தலைப்பிற்கு கீழ் வரக் கூடிய இந்த திருக்குறளில் நம்முடைய திருவள்ளுவர் ஆரோக்கிய வாழ்விற்கான நான்கு படிநிலைகளை குறிப்பிட்டிருக்கிறார்.

நோய் என்றால் என்ன, அதற்கு உரிய காரணம், அதை தீர்ப்பதற்கான வழி முறை, படிப்படியான வெற்றி இந்த நான்கு தான் அந்த படிநிலைகள். இதில் முதல் படிநிலையை பற்றி நம்முடைய முந்தன பதிவில் பார்த்திருந்தோம். இந்தப் பதிவில் நோய்களுக்கான முக்கிய காரணங்கள் என்ற அடிப்படையில் ஒரு சில தகவல்களை நாம் பார்க்கலாம்.

நமக்கான தெளிவு:

இதற்கு முந்தன பதிவில் இந்த பூமியில் வாழக் கூடிய ஒவ்வொரு உயிரினமும் உண்ணக் கூடிய முதல் உணவு எது என்ற கேள்வியை நாம் கேட்டிருந்தோம். உங்களில் சிலர் அதற்கான பதிலை சொல்லி இருந்தீர்கள். உங்களுடைய முழு ஈடுப்பாட்டிற்கு எங்களுடைய நன்றிகள். அதில் பாதி பேர் பால் தான் முதல் உணவு என்று குறிப்பிட்டிருந்தார்கள். மீதி பேர் காற்று தான் முதல் உணவு என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டும் தான் உயிர்வழி என்ற பதிலை குறிப்பிட்டிருந்தார்கள். உயிர்வழி என்றால் ஆக்ஸிஜன். நம்முடைய சுவாசத்திற்கு உதவக் கூடிய காற்று என்று குறிப்பிடலாம். இங்கு காற்றிற்கும், உயிர்வழிக்கும் மிக பெரிய வித்தியாசம் இருக்கிறது.

தொப்புல் கொடி அறுப்பட்டு அம்மாவின் துணை இல்லாமல் நாமாக எடுத்துக் கொண்ட முதல் உணவு நாம் சுவாசித்த முதல் சுவாசம்தான். சுவாசத்திற்கும் நோய்களுக்கான காரணத்திற்கும் என்ன தொடர்பு என்று ஒரு சந்தேகம் எழலாம். நிறையவே தொடர்பு இருக்கிறது. நம்முடைய சுவாசம் தான் உடல் வெப்ப நிலையை சீராக்கும். எண்ணம் ஓட்டத்தை தீர்மானிக்கும். இரத்த ஓட்டத்தை ஒழுங்கு படுத்தும். உள்ளுறுப்புகள் இயக்கத்தை சரி செய்யும்.

இது எல்லாவற்றிற்கும் தேவையான மொத்த ஆற்றலையும் தருவது தான் நம்முடைய சுவாசம். அமைதியான, நிம்மதியான, நிதானமான சுவாசத்தை நாம் சுவாசிகின்றோமா என்ற கேள்வி கேட்டோம் என்றால் இல்லை என்பது தான் பதிலாக இருக்கும்.

விரைவான வாழ்க்கை சூழல் நம்முடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் விரிவாக்க செய்கிறது. ஆனால், நம்முடைய சுவாசத்தை குறைத்து விட்டது. நாம் சுவாசிக்கின்ற சுவாசத்துடைய அளவும், நம்முடைய ஆரோக்கியத்துடைய அளவும் சமமான விகிதத்தில் இருக்கும். நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு இந்த பஞ்சபூத சத்துவங்களுடைய இயக்கத்தில் காற்றுடைய பங்கு குறிப்பிட தக்கது.

நம்முடைய சுவாசத்தில் நாம் கவணத்தை திருப்பும் பொழுது உடலும், மனமும் தன்னை தானே சரி செய்து கொள்ளும். பக்குவத்தை அடையும். நம்முடைய உடல் மற்றும் மன பிரட்சனைக்கு காரணம் தேடி அதற்கான தீர்வை தேடி எங்கெங்கோ நாம் ஓடுகிறோம்.

ரொம்பவே முக்கியமான காரணமும் தீர்வும் வேறு எங்கையும் இல்லை நம்முடைய மூக்கிற்கு கீழ் நடக்கின்ற சுவாசத்தில் இருக்கிறது. நம்முடைய இருதய துடிப்பு நம்மை கேட்டு துடிப்பது கிடையாது. ஆனால் நாம் நினைத்தோம் என்றால் நம்முடைய சுவாசத்தை ஈட்டலாம், மறைக்கலாம், நிதானமாக்கலாம்.

சுவாசம் சரி ஆனாலே தெளிவும், அறிவும் நமக்கு கிடைக்கும். அந்த தெளிவு நமக்கான உணவு எது, நாம் கடைப்பிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்கள் எது, கலாச்சாரம் எது, பண்பாடு எது, நம்முடைய மகத்துவம் எது என்பதை எல்லா விதமான புரிதலிலும் நமக்கு ஏற்படுத்தும்.

இந்த ஒரு கருத்து தான் இங்கு ரொம்பவே முக்கியமானது. உடல், மன பிரட்சனைக்கு பல விதமான காரணங்களை நாம் குறிப்பிடலாம்.ஆனால், நாம் நம்முடைய சுவாசத்தில் கவணம் செலுத்தாதது தான் மிக முக்கியமான காரணம்.

நம் மற்ற உணவுகள்

சுவாசத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நம்முடைய ஐம்புலன்கள் வழியாக நம் உடல் மற்றும் மனதிற்குள்ள போகக் கூடிய எல்லாமே நம்முடைய உணவு தான். ஆனால், நமக்கான உணவா என்று நாம் தான் யோசிக்க வேண்டும்.

கண், காது, மூக்கு, வாய் மற்றும் தொடு உணர்வு. இது எல்லாவற்றின் வழியாகவும் நாம் எதை எல்லாம் நமக்குள் காதலிக்கின்றோமோ அது எல்லாமே தான் நமக்கான ஆரோக்கியத்தையும், நமக்கான நோயையும் தீர்மானிக்கும்.

இதை நாம் தெளிவாக புரிந்துக் கொண்டு நம்முடைய நல்வாழ்விற்கு அவசியமானதை மட்டும் நம்முடைய வாழ்க்கையில் நாம் அனுபவித்தோம் என்றால் வள்ளுவர் சொன்ன வார்த்தையுடைய மகத்துவம் நமக்கு விளங்க ஆரம்பிக்கும். “நோய்நாடி… செயல்.”

நன்றிகள்!

நோயும், தீர்வும்! Click here

எதற்காகவும் உன் காதலை விட்டுதராதே! Click here

beelive123

Chiselers Academy, One of the Best institute for E-Learning.Its mainly for UPSC and TNPSC aspirants.We all have certain dream in our life.some have a dream to Become a Doctor,Engineer,Lawyer,Teacher and etc.If you have a Dream to become and administrator like IAS.,IPS.,IRS.,we are here to show you the way to Know about it and achieve it.

One thought on “நோயின் மிக முக்கியமான காரணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *