தடை. அதை உடை!

தடை. அதை உடை!

குறளின் குரல்! – திருக்குறள்

தடை. அதை உடை!

பதிவு: 078 அதிகாரம்: வினைத்திட்பம் குறள் எண்: 668

தடை. அதை உடை!

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல்.

விளக்கம்:
கலங்காமல் மேற்கொண்ட காரியத்தில் தளராமல் காலம் தாழ்த்தாமல் செய்க.

Alarm Clock And Analog Camera On Wooden Desk
தடை. அதை உடை!

ஒரே விதமான நகைச்சுவைக்கு நாம் மீண்டும் மீண்டும் சிரிக்க மாட்டோம்.ஆனால் ஒரே விதமான சோகமான விஷயத்திற்கு மட்டும் மீண்டும் மீண்டும் வருத்தப்படுவோம்.நேரம் என்ற ஒரு விஷயம் நம் எல்லோருக்கும் பொதுவானது என்று நமக்கு தெரியும்.ஆனால் அது மிகவும் உயர்வானது என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.மூன்று விஷயங்கள் நம் வாழ்க்கையில் நம்முடைய நேரத்தை தேவையற்ற விதத்தில் வீணடிக்கும் என்று கூறலாம்.”நடந்து முடிந்தததை நினைத்து வருத்தப்படுவது, நடந்துக்கொண்டிருப்பதை நினைத்து குழம்புவது, நடக்கப்போவதை நினைத்து பயப்படுவது.”இந்த மூன்றுமே நம்முடைய வாழ்க்கையை வீணடிக்கும்.

வாழ்வை புரிந்து வாழ்!

நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் வாழ்க்கையை எளிமையாக புரிந்து வாழ்வதற்கான சிறந்த வழி, நமக்கு முன் வாழ்ந்துவிட்டு சென்றவர்களுடைய வாழ்க்கையை பார்த்து அதிலிருந்து நமக்கான கருத்து, எண்ணம், சிந்தனை, தத்துவங்களை எடுத்து நம் வாழ்க்கையில் அதை நடைமுறைப்படுத்தி வாழ்வது.மிகவும் பெரிய வித்யாசங்கள் நமக்கும் அவர்களுக்கும் இடையில் இருக்காது சில விஷயங்கள் மாறுபடும்.ஆனால், நிறைய விஷயங்கள் அவர்கள் எப்படி கையாண்டார்கள் என்பதை வைத்து நாம் நம்முடைய வாழ்க்கையை அழகானதாக மாற்றலாம்.

அப்படி நாம் அவர்களுடைய வாழ்க்கையோடு நம்முடைய வாழ்க்கையை ஒப்பிடும்போது நமக்கு நிறைய படிப்பினைகள் கிடைக்கும்.அதில் மிகவும் முக்கியமானது, நமக்கு ஏற்படுகின்ற கவலைகளை நாம் எப்படி கடந்து போகவேண்டும் என்ற ஒரு தெளிவு.தோல்விகளை சந்திக்கும்பொழுதும், எதிர்பார்த்தது கிடைக்காதபொழுதும், சில உறவுகளை இழக்கும்பொழுதும், சகித்துக்கொள்ள முடியாத சில நிகழ்வுகள் நம் வாழ்க்கையில் நடக்கும்பொழுதும், வருத்தம், கவலை ஏற்படுவது என்பது மிகவும் எதார்த்தமான ஒரு விஷயம் தான்.எந்தக் கவலையான சம்பவம் நம் வாழ்க்கையில் நடந்தாலும் அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம் என்பது மிகவும் முக்கியாமான விஷயம்.சிந்தித்து பார்த்தோமானால், நம்முடைய பெரும்பாலான நேரத்தை நடந்து முடிந்ததை நினைத்து வருத்தப்படுவதில் தான் செலவழிப்போம்.

Woman Sitting On Sofa While Working At Home
தடை. அதை உடை!

சிறந்த இலட்சியத்திற்காக வாழ்பவர்களுக்கு அனைத்து இழப்புகளையும் விட, நேரம் காலத்தின் இழப்பு என்பது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.அடைவது, அனுபவிப்பது, இழப்பது என்பது தான் வாழ்க்கையினுடைய படிநிலைகள்.ஒவ்வொரு கால நேரத்திலும் நாம் எதையாவது அடைவோம் அல்லது எதையாவது நாம் இழப்போம்.ஒரு செயல் நடந்ததால் ஏற்படுகின்ற வலியைவிட, நடந்து முடிந்த பிறகும் அதனைப் பற்றியே நினைத்து கலங்குவதால் ஏற்படுகின்ற வலி என்பது அதிகம்.எப்பொழுதோ, எங்கேயோ யாராலோ நடந்த விஷயத்தை நினைத்து வருத்தப்பட்டு வாழ்க்கையை வீணடிப்பது என்பது ஒரு மிகப்பெரிய பாவம் என்று அனைத்து வேதங்களிலும் அழுத்தமாக குறிப்பிட்டிருந்தார்கள் என்றால், அனைவரும் வாழ்க்கையை சரியாக வாழ ஆரம்பித்திருப்போம்.

உடலையும் மனதையும் கெடுக்க செய்யக்கூடிய மற்ற அனைத்து போதைப் பொருட்களையும் விட மிக மோசமான ஒரு தடைக்கல் என்பது கவலை மட்டும் தான்.எவற்றிற்கெல்லாம் நாம் வருத்தப்படுகின்றோம் என்ற பட்டியலை நாம் எடுத்தோமானால், அதில் 99% தேவையற்ற காரணங்களாக தான் இருக்கும்.எந்தக் கவலையாலும் நம்முடைய இலட்சியம், கடமையை நாம் விட்டுவிடக்கூடாது என்பதால் தான், வள்ளுவர் மிகவும் அழுத்தமாக இந்தக் குறளை “வினைத்திட்பம்” என்ற அதிகாரத்தின் கீழ் கொடுத்திருக்கின்றார்.

நம்முடைய வளர்ச்சிக்கு தடையாக இருக்கக்கூடிய கவலை என்ற தடைக்கல்லை நாம் உடைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.நாம் எந்த செயலை மேற்கொண்டாலும், அந்த செயலுக்கு உட்பட்ட கவலை, குழப்பம், பயம் நிச்சயம் நம் வாழ்க்கையில் எட்டிப்பார்க்கும்.அப்படி ஏற்படும்போதெல்லாம், வள்ளுவருடைய இந்த அறிவுரையை மனதில் வைத்து, கலங்காமல், மனம் தளராமல், நம்முடைய கடமையை நாம் செய்ய வேண்டும்.அதற்காக தான் வள்ளுவர் இந்தக் குறளை நமக்கு குறிப்பிட்டிருக்கிறார். “கலங்காது….. செயல்.”

நன்றிகள்!

விட்டுவிடு! Click here

கெ(கே)ட்ட வார்த்தை! Click here

beelive123

Chiselers Academy, One of the Best institute for E-Learning.Its mainly for UPSC and TNPSC aspirants.We all have certain dream in our life.some have a dream to Become a Doctor,Engineer,Lawyer,Teacher and etc.If you have a Dream to become and administrator like IAS.,IPS.,IRS.,we are here to show you the way to Know about it and achieve it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *