தேவையற்றதை தூக்கி எறி!

தேவையற்றதை தூக்கி எறி!

குறளின் குரல்! – திருக்குறள்

தேவையற்றதை தூக்கி எறி!

பதிவு: 103 அதிகாரம்:ஆள்வினையுடைமை குறள் எண்:618

தேவையற்றதை தூக்கி எறி!

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி

விளக்கம்:
உடல் உறுப்புகள் செயலற்று இருத்தல் குறைவாகாது. “தெறிந்துக்கொள்ளவேண்டியதை அறிந்து”, “செய்ய வேண்டியதை செய்யாமல் இருப்பதே குறையாகும், குற்றமுமாகும்”.

ஆள்வினையுடைமை என்ற தலைப்பிற்கு கீழ் வரக்கூடிய மிக அற்புதமான ஒரு குறள். ஆள்வினையுடைமை என்பது, இடைவிடாமல் விடாமுயற்சி மேற்கொண்டு நடத்தும் திறன் என்று கூறலாம். நாம் நினைக்கின்ற நிறைய விஷயங்கள் நம் வாழ்க்கையில் செய்ய முடியாமல் போவதற்கான காரணம் என்ன என்பதை சிந்தித்துப் பார்த்தோம் என்றால் நம்முடைய சிந்தனையிலேயே அதுக்கான பதில் கிடைக்கும்.

நம்முடைய சிந்தனைகளில் நாம் தீவிரமா இல்லாத பொழுது நிச்சயம் நம்முடைய செயல்பாடுகளில் நமக்கு வெற்றி கிடைக்காது. நாம் யாராக இருந்தாலும் சரி, எந்த சூழலில் வாழ்ந்துக் கொண்டிருந்தாலும் சரி, நமக்கென்று ஒரு விருப்பம், ஆசை, இலட்சியம் என்பது கண்டிப்பாக இருக்கும். அப்படி நாம் ஆசைப்படுகின்ற இலட்சியத்தை அடையவதற்கு ஒரு சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

நாம் தேர்ந்தெடுக்கின்ற துறை சார்ந்து இந்த வழிமுறைகள் வித்தியாசப் படும். சிலருக்கு மருத்துவர் ஆக வேண்டும், சிலருக்கு காவலராக ஆக வேண்டும், சிலருக்கு தலைசிறந்த ஆட்சியாளராக ஆகவேண்டும், சிலருக்கு ஆசிரியராக ஆக வேண்டும், தலைசிறந்த தொழிலதிபராக ஆக வேண்டும், உலக மக்கள் பசியை போக்கக் கூடிய விவசாயியாக ஆக வேண்டும், சிறந்த படிப்பாளியாக ஆக வேண்டும், இராணுவ வீரனாக ஆக வேண்டும். அரசியல்வாதியாக ஆக வேண்டும்.

Question Mark, People, Think, Mind, Confusion
தேவையற்றதை தூக்கி எறி!

இப்படி எண்ணில் அடங்கா எண்ணற்ற கனவுகள், இலட்சியத்தில், எந்த இலட்சியத்தை நாம் தேர்ந்தெடுத்தாலும் அந்த இலட்சியத்திற்கு உட்பட்ட சில வழிமுறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். அதற்கு உட்பட்ட செயல்பாடுகளில் விடா முயற்சியோடு ஈடு பட்டால் மட்டும் தான் நாம் எதிர்பார்க்கின்ற விஷயத்தை நாம் அடைய முடியும். உண்மையான ஒரு இலட்சியத்தை அடைவது என்பது ஒரு தாய் பிரசவிக்கின்றதற்கு சமம். பல வலிகள் நிறைந்தது. மிகவும் கவனத்துடம் நாம் செயல்பட வேண்டும்.

இந்த குறளில் வள்ளுவர் குறிப்பிடுகின்ற விஷயம் என்னவென்றால், ‘பொறியின்மை யார்க்கும் பழியன்று’, அதாவது, உடல் உறுப்பு செயலற்று இருப்பது என்பது குறையாகாது என்கிறார். நாம் தேர்ந்தெடுக்கின்ற இலட்சியத்தில் நம்முடைய உடல் உறுப்புகள் தான் அதிகளவு பங்களிப்பில் நமக்கு உதவும் எனும் பொழுது, அந்த உடல் உறுப்பில் எதாவது குறை இருந்தாலும் அது குற்றமாகாது என்று சொல்கிறார். நிறைய நேரங்களில் தங்களுடைய உடல் தோற்றத்தை வைத்தே பல பேர் பல விஷயத்திற்கு முன்னவந்து நிற்கமாட்டார்கள்.

வள்ளுவர் இங்கு எந்த விஷயத்தை குறையாக கூறுகிறார் என்றால் “அறிவறிந்து ஆள்வினை இன்மை” அதாவது “அறியவேண்டியதை அறிந்து, செய்ய வேண்டியதை செய்யாமல் இருத்தலே குற்றமாகும்” என்று குறிப்பிடுகிறார். மிகவும் அடிக்கோடிட்டு பார்க்கவேண்டிய ஒரு இடம் “நம்முடைய வாழ்க்கை லட்சியம் என்னவோ அதற்கு உட்பட்ட விஷயங்களை தெரிந்துக்கொள்வதில் மட்டும் தான் நம்முடைய நேரத்தையும், நம்முடைய கவனத்தையும், நம்முடைய மனதையும் கொடுக்க வேண்டுமே தவிர, நாம் கடந்து போகும் பாதையில் நம்மை தாண்டி போகக்கூடிய மற்ற அனைத்து விஷயங்களை பற்றி தெரிந்துக் கொள்வது இல்லை”.

தேவையில்லாத விஷயங்களை பற்றி புரிந்துக்கொள்வதிலோ, இல்லை தேவையில்லாத காரியங்களில் ஈடுபடுவதிலோ நம் நேரத்தை செலவழிக்க கூடாது. ஒரு செய்தித்தாளில் வரக்கூடிய செய்திகளும் நமக்கானது இல்லை. ஒரு திரைப்படத்தில் வரக்கூடிய எல்லா காட்சிகளுமே நமக்கு பிடித்தமாதிரி அமைவதற்கு வாய்ப்பில்லை. நம்முடன் பழகுகின்ற எல்லா மனிதர்களை பற்றியும் முழுமையாக தெறிந்துக் கொள்ள வேண்டிய அவசியமும் நமக்கு இல்லை.

அப்படி ஒரு உறவை அதிகம் தெறிந்துக்கொள்ளவேண்டும் என்று நாம் முயற்ச்சி எடுக்கும்பொழுது அந்த உறவைப் பற்றி நாம் அதிகமாக தெரிந்துக்கொள்வதற்கு முன்னமே அந்த உறவை நாம் இழந்திருப்போம். காரணம், மற்றொரு மனிதனுடைய தேவையற்ற பக்கத்தை தெரிந்துக்கொள்வதற்கு நாம் முற்படும்பொழுது நம்மால் அவர்களுடன் வாழ முடியாது. இதேதான் இலட்சியத்திற்கும். கற்றுக்கொள்ளக்கூடாத விஷயங்களை கற்றுக்கொள்ள முற்படுவதும் செய்யக்கூடாத செயல்களை துணிகரமாக செய்ய முயற்ச்சிப்பதும் என்பது தேவையற்றது. அவை பின்னடைவுகளை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும். அதை தான் வள்ளுவர் இந்தக் குறள் மூலம் நமக்கு ஒரு எச்சரிக்கையாக கொடுத்திருக்கின்றார் “பொறியின்மை யார்க்கும்…….. பழி” என்று.


நன்றிகள்!

தேடாதே. தொலைவாய்! Click here

உன் நேரம் வரும்வரை காத்திரு! Click here

beelive123

Chiselers Academy, One of the Best institute for E-Learning.Its mainly for UPSC and TNPSC aspirants.We all have certain dream in our life.some have a dream to Become a Doctor,Engineer,Lawyer,Teacher and etc.If you have a Dream to become and administrator like IAS.,IPS.,IRS.,we are here to show you the way to Know about it and achieve it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *